மீண்டும் ‘இந்தியன் 2’ படத்தில் இணையும் கமல்… தள்ளிப் போடப்பட்ட ‘விக்ரம்’!?

மீண்டும் ‘இந்தியன் 2’ படத்தில் இணையும் கமல்… தள்ளிப் போடப்பட்ட ‘விக்ரம்’!?

நடிகர் கமல்ஹாசன் மீண்டும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் மீண்டும் கலந்துகொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்கு முன்னர் சங்கர்- கமல்ஹாசன் கூட்டணியில் ‘இந்தியன் 2’ திரைப்படம் உருவாகி வந்தது. இப்படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

மீண்டும் ‘இந்தியன் 2’ படத்தில் இணையும் கமல்… தள்ளிப் போடப்பட்ட ‘விக்ரம்’!?

கடந்த பிப்ரவரி மாதம் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் இந்தியத் திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போதிலிருந்தே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதையடுத்து படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பவில்லை.

இதற்கிடையில் லோகேஷ் கனகராஜ்- இயக்கும் ‘விக்ரம்’ படத்தில் நடிக்க கமிட் ஆகிவிட்டார் கமல்ஹாசன். இதற்கிடையில் கமலஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பிலும் கலந்துகொண்டு வருகிறார்.

இதனால் கடுப்பான ஷங்கர் லைகா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியதாகக் கூட செய்திகள் வெளியாகின.

மீண்டும் ‘இந்தியன் 2’ படத்தில் இணையும் கமல்… தள்ளிப் போடப்பட்ட ‘விக்ரம்’!?

தற்போது பலகட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தியன் 2 படப்பிடிப்பு நடப்பது உறுதியாகியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. டிசம்பர் மாதம் இந்தியன் 2 படப்பிடிப்பு நடக்கவிருப்பதாகவும், அதற்காக கமல் 28 நாட்கள் ஒதுக்கியிப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தியன் 2 படத்தை முடித்துக் கொடுத்த பின்னர் தான் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் நடிக்கவிருக்கிறாராம்.

Share this story