×

செல்வராகவன் நடிக்கும் ‘சாணிக் ‘காயிதம் பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் தனுஷ்!?

நடிகர் தனுஷ் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இயக்குனர் அருண் மாதேஸ்வரன் ராக்கி என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். தற்போது செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘சாணிக் காயிதம்’ படத்தை இயக்கி வருகிறார். ராக்கி படத்தின் ட்ரைலர் வெளியாகி அருண் மாதேஸ்வரன் தமிழ் சினிமாவின் நம்பிக்கைகுரிய இயக்குனர் என்ற பெயரை பெற்றுத் தந்தது. தற்போது தனுஷ் மற்றும் அருண் மாதேஸ்வரன் இருவரும் கூட்டணி அமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தை சத்யஜோதி
 

நடிகர் தனுஷ் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் ராக்கி என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். தற்போது செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘சாணிக் காயிதம்’ படத்தை இயக்கி வருகிறார். ராக்கி படத்தின் ட்ரைலர் வெளியாகி அருண் மாதேஸ்வரன் தமிழ் சினிமாவின் நம்பிக்கைகுரிய இயக்குனர் என்ற பெயரை பெற்றுத் தந்தது.

தற்போது தனுஷ் மற்றும் அருண் மாதேஸ்வரன் இருவரும் கூட்டணி அமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தனுஷ் நடிப்பில் தற்போது கர்ணன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ஜகமே தந்திரம் படம் வெளியாகத் தயாராக இருக்கிறது. அதையடுத்து, மித்ரன் ஜவஹர், ராம்குமார், கார்த்திக் நரேன் உள்ளிட்ட இயக்குனர்களின் படங்களில் நடிக்கவுள்ளார்.

தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாகக் கோலிவுட் வட்டாரங்கள் உறுதியாகத் தெரிவிக்கின்றன.