×

லைகா தொடர்ந்த வழக்கு… ஷங்கர் வேறு படத்தை இயக்க தடை விதிக்க முடியாது… நீதிமன்றம் அதிரடி!

இயக்குனர் ஷங்கர் ‘இந்தியன் 2’ படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு படத்தை இயக்கக்கூடாது என்று லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ஷங்கருக்கு இடைக்காலத் தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இயக்குனர் ஷங்கர்- கமல்ஹாசன் கூட்டணியில் ‘இந்தியன் 2‘ திரைப்படம் பெரும் பொருட்செலவில் உருவாகி வந்தது. இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வந்தனர். கடந்த வருடம் பிப்ரவரி மாதம் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட கிரேன் விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தது இந்தியத் திரைத்துறையையே
 

இயக்குனர் ஷங்கர் ‘இந்தியன் 2’ படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு படத்தை இயக்கக்கூடாது என்று லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ஷங்கருக்கு இடைக்காலத் தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இயக்குனர் ஷங்கர்- கமல்ஹாசன் கூட்டணியில் ‘இந்தியன் 2‘ திரைப்படம் பெரும் பொருட்செலவில் உருவாகி வந்தது. இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வந்தனர்.

கடந்த வருடம் பிப்ரவரி மாதம் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட கிரேன் விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தது இந்தியத் திரைத்துறையையே கலங்கடித்தது. அதையடுத்து பாதிக்கப்பட்டோர் குடும்பத்திற்கு கமல்ஹாசன் 1 கோடி, ஷங்கர் 1 கோடி மற்றும் லைகா நிறுவனம் 2 கோடி வழங்குவதைத் தெரிவித்தனர். இந்த விபத்தை அடுத்து இந்தியன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. மீண்டும் அந்தப் படம் தொடங்கப்படவில்லை.

இதனால் கமல்ஹாசன், ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். ஷங்கர் தற்போது தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிப்பில் புதிய படத்தை இயக்கத் தயாராகி வருகிறார்.

லைகா நிறுவனம் ஷங்கர் மீது தொடுத்துள்ள வழக்கில் இந்தியன் 2 படத்திற்கு 150 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், 236 கோடி வரை பட்ஜெட் ஆகியுள்ளது. இருப்பினும் 80% படப்பிடிப்பு மட்டுமே நிறைவடைந்துள்ளது. ஷங்கருக்கு 40 கோடி சம்பளம் தருவதாகப் பேசி 14 கோடி கொடுத்துள்ளோம். மீதமுள்ள 26 கோடியை நீதிமன்றத்தில் வைப்புத் தொகையாக செலுத்தவும் தயார். எனவே மீதமுள்ள படப்பிடிப்பை முடிக்கும் வரை ஷங்கர் வேறு படங்கள் இயக்கத் தடை விதிக்கவேண்டும் என்றும் தெரிவித்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி பிடி ஆஷா தலைமையிலான அமர்வில் விசாரிப்பட்ட போது, இயக்குனர் ஷங்கரின் விளக்கத்தைக் கேட்காமல் இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று உத்தரவளிக்கப்பட்டது. இந்த மனு குறித்து ஷங்கர் பதிலளிக்கவும், வழக்கை ஏப்ரல் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.