×

ஹாலிவுட் படத்திற்காக அமெரிக்காவிற்கு பறக்கும் தனுஷ்!

நடிகர் தனுஷ் ஹாலிவுட்டில் இரண்டாவதாகக் களமிறங்கும் கிரே மேன் படத்தின் படப்பிடிப்பில் விரைவில் இணையவிருப்பதாகக் கூறப்படுகிறது. தனுஷ் தற்போது ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் அட்ராங்கி ரே படத்தில் நடித்து வருகிறார். கார்த்திக் நரேன் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு இன்னும் இரண்டு நாட்களில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கபடுகிறது. அதையடுத்து தனுஷ் தி கிரே மேன் படத்தின் படப்பிடிப்பிற்காக அமெரிக்கா பறக்க இருப்பதாக கோலிவுட்
 

நடிகர் தனுஷ் ஹாலிவுட்டில் இரண்டாவதாகக் களமிறங்கும் கிரே மேன் படத்தின் படப்பிடிப்பில் விரைவில் இணையவிருப்பதாகக் கூறப்படுகிறது.

தனுஷ் தற்போது ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் அட்ராங்கி ரே படத்தில் நடித்து வருகிறார். கார்த்திக் நரேன் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு இன்னும் இரண்டு நாட்களில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

அதையடுத்து தனுஷ் தி கிரே மேன் படத்தின் படப்பிடிப்பிற்காக அமெரிக்கா பறக்க இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அங்கு தனுஷ் இரண்டு மாதங்கள் தங்கி நடிக்க உள்ளாராம். அப்படத்தில் தனுஷின் கதாபாத்திரம் இதுவரையிலும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

மார்க் கிரீனியின் 2009 நாவலை தழுவி ‘தி கிரே மேன்’ படம் எடுக்கப்படுகிறது. அவெஞ்சர்ஸ் படத்தை இயக்கிய ரஸ்ஸோ பிரதர்ஸ் இப்படத்தை இயக்குகின்றனர்.இப்படத்தில் ரியான் கோஸ்லிங், கேப்டன் அமெரிக்காவாக அறியப்படும் கிறிஸ் எவன்ஸ், மற்றும் அனா டி அர்மாஸ் ஆகியோருடன் ஜெசிகா ஹென்விக், வாக்னர் மவுரா, ஜூலியா பட்டர்ஸ் ஆகியோரும் நடிக்கின்றனர்.

200 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் நெட்பிலிக்ஸ் ஒரிஜினலின் மிக பெரிய பட்ஜெட் திரைப்படமாக இப்படம் உருவாக உள்ளது