×

ஹிப்ஹாப் ஆதியின் ‘அன்பறிவு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்போது ? வெளியானது புதிய அப்டேட்…

ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் ‘அன்பறிவு’ படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. பன்முறை திறமைக்கொண்ட ஹிப்ஹாப் ஆதி, இசையமைப்பாளராக சினிமாவில் தடம்பதித்தாலும் தற்போது சினிமா படம் இயக்குவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அவர் நடித்து இயக்கும் வரும் திரைப்படம் சிவகுமாரின் சபதம். கடந்த மாதம் தொடங்கப்பட்ட இப்படத்தின் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஹிப்ஹாப் ஆதி தயாரிக்கிறார். இந்த படத்திற்கு பிறகு ஹிப்ஹாப் ஆதி ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம் ‘அன்பறிவு’. இந்த
 

ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் ‘அன்பறிவு’ படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

பன்முறை திறமைக்கொண்ட ஹிப்ஹாப் ஆதி, இசையமைப்பாளராக சினிமாவில் தடம்பதித்தாலும் தற்போது சினிமா படம் இயக்குவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அவர் நடித்து இயக்கும் வரும் திரைப்படம் சிவகுமாரின் சபதம். கடந்த மாதம் தொடங்கப்பட்ட இப்படத்தின் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஹிப்ஹாப் ஆதி தயாரிக்கிறார்.

இந்த படத்திற்கு பிறகு ஹிப்ஹாப் ஆதி ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம் ‘அன்பறிவு’. இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. அட்லியிடம் உதவி இயக்குனராக இருந்த அஸ்வின் ராம் இந்த படத்தை இயக்கி வருகிறார். ஆதி இசையமைக்கும் இந்த படம் ஒரு கிராமத்து கதைக்களம் கொண்ட படமாக உருவாகிறது. ஆதிக்கு ஜோடியாக காஷ்மீரா நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் நெப்போலியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் விதார்த், சாய்குமார், ஊர்வசி, விஜய் டீவி தீனா, சங்கீதா ஆகியோர் நடிக்கின்றனர்

முதல்முறையாக ஆதி இரட்டை வேடத்தில் நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ‌முக்கிய அப்டே வெளியாகியுள்ளது. அதன்‌படி ‘அன்பறிவு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு ‌அன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என‌ அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.