ஹிப்ஹாப் ஆதி நடித்து இயக்கும் ‘சிவகுமாரின் சபதம்’!

ஹிப்ஹாப் ஆதி நடித்து இயக்கும் ‘சிவகுமாரின் சபதம்’!

ஹிப்ஹாப் ஆதி நடித்து இயக்கும் படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

ஹிப்ஹாப் ஆதி என்றாலே நினைவுக்கு வருவது அவரது ராப் பாடல்கள் தான். தமிழில் ராப் பாடல்களை அறிமுகப்படுத்தியது ஹிப்ஹாப் ஆதி என்று கூட சொல்லலாம். ‘வணக்கம் சென்னை’ படத்தில் அனிருத் இசையில் பாடியதன் மூலம் திரைத்துறையில் நுழைந்தார். பின்னர் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்த ‘ஆம்பள’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

Image

அதையடுத்து ‘மீசைய முறுக்கு’ படத்தின் மூலம் இயக்குனராகவும் நடிகராவும் ஒருசேர சினிமாவில் புதிய அவதாரம் எடுத்தார். தனது முதல் படத்திலே சிறந்த நடிப்பு மற்றும் இயக்கம் என இரு துறைகளிலும் கலக்கினார். அதையடுத்து நட்பே துணை, நான் சிரித்தால் என இரு படங்களில் நடித்தார்.

தற்போது மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார் ஆதி. இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். தற்போது இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்திற்கு ‘சிவகுமாரின் சபதம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு ஹிப்ஹாப் ஆதியே இசையமைப்பதாகவும் கூறப்படுகிறது.

Share this story