×

‘இந்தியன் 2’ நிறுத்தப்பட்டதற்கான காரணத்தை வெளிப்படுத்திய காஜல் அகர்வால்!

நடிகை காஜல் அகர்வால் இந்தியன் 2 படம் நிறுத்தப்பட்டதற்கானக் காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஷங்கர்- கமல்ஹாசன் கூட்டணியில் உருவான இந்தியன் படம் மாபெரும் வெற்றி அடைந்ததை அடுத்து அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பை 2019-ம் ஆண்டு வெளியிட்டனர். படத்தின் வேலைகள் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் போன வருடன் பிப்ரவரி மாதம் ‘இந்தியன் 2‘ படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதையடுத்து நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு கொரோனா வந்ததாலும்
 

நடிகை காஜல் அகர்வால் இந்தியன் 2 படம் நிறுத்தப்பட்டதற்கானக் காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஷங்கர்- கமல்ஹாசன் கூட்டணியில் உருவான இந்தியன் படம் மாபெரும் வெற்றி அடைந்ததை அடுத்து அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பை 2019-ம் ஆண்டு வெளியிட்டனர். படத்தின் வேலைகள் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் போன வருடன் பிப்ரவரி மாதம் ‘இந்தியன் 2‘ படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதையடுத்து நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு கொரோனா வந்ததாலும் தள்ளிப்போனது. கொரோனாவுக்குப் பின் சிறிது காட்சிகள் படமாக்கப்பட்டன. பின்னர் மீண்டும் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இப்படி படம் ஆரம்பித்ததிலிருந்து இழுபறியாகவே போய்க்கொண்டிருக்கிறது.

இதற்கிடையில் இந்தியன் 2 படம் மொத்தமாக நிறுத்தப்பட்டதாக சினிமா வட்டாரங்கள் பேச ஆரம்பித்தன. காஜல் அகர்வால் தற்போது இந்தியன் 2 படத்தின் நிலை பற்றி பேசியுள்ளார்.

காஜல் அகர்வால் தற்போது மொசகல்லு என்ற படத்தில் நடித்துள்ளார். அந்தப் படத்தின் ப்ரோமோஷனுக்கான நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது இந்தியன் 2 படம் பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது படக்குழுவைச் சார்ந்த பெரும்பாலோனோர் அமெரிக்காவில் இருப்பதால் அவர்கள் கொரோனா சூழல் காரணமாக இங்கு வரமுடியவில்லை. அதனால் தான் படம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்திலிருந்தே தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தது. படத்தில் பணியாற்றிய பலரும் இந்தப் படத்திலிருந்து விலகியுள்ளனர். ஷங்கரும் தெலுங்கு பக்கம் சென்றுவிட்டார். கமல்ஹாசன் தேர்தல் அடுத்த படங்கள் என கிளம்பிவிட்டார். இவை இந்தியன் 2 படம் கைவிடப்பட்டதை மேலும் உறுதிப்படுத்துகின்றன.