×

பிரம்மாண்ட ஆன்லைன் நிகழ்ச்சி மூலம் மக்களைச் சந்திக்க வரும் ஜகமே தந்திரம் படக்குழு!

ஜகமே தந்திரம் படக்குழுவினர் பிரம்மாண்ட நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் ரசிகர்களைச் சந்திக்க இருப்பதாக அறிவித்துள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் மற்றும் தனுஷ் கூட்டணியின் ஜகமே தந்திரம் திரைப்படம் ஜூன் 18-ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது. இந்தப்ப படத்தின் அனைத்து பாடல்களும் வெளியாகிவிட்டது. ஜூன் 7-ம் தேதி படத்தின் ஆடியோ வெளியீடு நடைபெற்றது. அப்போது படக்குழுவினர் ட்விட்டர் ஸ்பேஸ் மூலம் ரசிகர்களுடன் உரையாடல் நடத்தினர். அதில் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் சந்தோஷ் நாராயணன், தீ, அறிவு உள்ளிட்ட படக்குழுவினர்
 

ஜகமே தந்திரம் படக்குழுவினர் பிரம்மாண்ட நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் ரசிகர்களைச் சந்திக்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.

கார்த்திக் சுப்புராஜ் மற்றும் தனுஷ் கூட்டணியின் ஜகமே தந்திரம் திரைப்படம் ஜூன் 18-ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது. இந்தப்ப படத்தின் அனைத்து பாடல்களும் வெளியாகிவிட்டது. ஜூன் 7-ம் தேதி படத்தின் ஆடியோ வெளியீடு நடைபெற்றது. அப்போது படக்குழுவினர் ட்விட்டர் ஸ்பேஸ் மூலம் ரசிகர்களுடன் உரையாடல் நடத்தினர்.

அதில் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் சந்தோஷ் நாராயணன், தீ, அறிவு உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். தனுஷ் அமெரிக்காவில் இருந்துகொண்டு அதில் கலந்துகொண்டார்.பல சுவாரசியமான தகவல்களையும் பகிர்ந்துகொண்டார்.

இந்நிலையில் ஜூன் 18-ம் தேதி படம் வெளியாக இருப்பதால் ஜூன் 17-ம் தேதி மாலை 4 மணிக்கு படக்குழுவினர் ரசிகர்களுடன் உரையாடல் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த பெரும் நிகழ்ச்சி நெட்பிளிக்ஸ், பேஸ்புக், ட்விட்டர், யூடிட்யூப் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களிலும் லைவ் ஆக வெளியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். கொங்காஸ் கூட்டத்துடன் இணையுங்கள் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்ச்சி படத்திற்கு கூடுதல் ஆதரவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.