‘ஜகமே தந்திரம்’ படத்தின் அனைத்து பாடல்களும் நாளை வெளியீடு!

‘ஜகமே தந்திரம்’ படத்தின் அனைத்து பாடல்களும் நாளை வெளியீடு!

ஜகமே தந்திரம் படத்தின் முழு ஆடியோவும் நாளை வெளியாக இருப்பதாகப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

கார்த்திக் சுப்புராஜ் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் ஜூன் 18-ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் முழு பாடல்களும் நாளை வெளியாக இருப்பதாகப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Image

நான்காவது பாடல் ஆளா ஓலா என்ற பாடலும், ஐந்தாவது பாடல் தீங்கு தாக்க என்ற பாடலும் வெளியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திலிருந்து இதற்கு முன்னர் வெளியாகிய ரகிட ரகிட மற்றும் புச்சி பாடல்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு சிறந்த ஆல்பத்தைக் கொடுத்துள்ளார்.

ஜகமே தந்திரம் படத்தின் ரிலீஸ்க்கு அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோவும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளத் குறிப்பிடத்தக்கது.

Share this story