×

அமெரிக்காவில் ஹவுஸ்புல்லான திரையரங்கம்.. ‘கர்ணன்’ படத்தை குடும்பத்துடன்‌ பார்த்த தனுஷ் மகிழ்ச்சி!…

கர்ணன் படத்தை நடிகர் தனுஷ் தனது குடும்பத்துடன் அமெரிக்கா திரையரங்கு ஒன்றில் பார்த்துள்ளார். தனுஷின் நடிப்பில் வெளியான ‘கர்ணன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.மாபெரும் வெற்றிப்பெற்றுள்ள இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விமர்சன ரீதியாக தரமான திரைப்படத்தை எடுத்துள்ளார் மாரி செல்வராஜ்.கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ள இப்படம் வசூலை வாரி குவித்துள்ளது. மாஞ்சோலை பகுதியில் வசிக்கும் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்காக வாள் தூக்கி போராடியுள்ளான் ‘கர்ணன்’. இதனால் ரசிகர்கள் கர்ணனை கொண்டாடி வருகின்றனர். நடிகர் தனுஷ்
 

கர்ணன் படத்தை நடிகர் தனுஷ் தனது குடும்பத்துடன் அமெரிக்கா திரையரங்கு ஒன்றில் பார்த்துள்ளார்.

தனுஷின் நடிப்பில் வெளியான ‘கர்ணன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.மாபெரும் வெற்றிப்பெற்றுள்ள இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விமர்சன ரீதியாக தரமான திரைப்படத்தை எடுத்துள்ளார் மாரி செல்வராஜ்.கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ள இப்படம் வசூலை வாரி குவித்துள்ளது. மாஞ்சோலை பகுதியில் வசிக்கும் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்காக வாள் தூக்கி போராடியுள்ளான் ‘கர்ணன்’. இதனால் ரசிகர்கள் கர்ணனை கொண்டாடி வருகின்றனர்.

நடிகர் ‌தனுஷ் தற்போது தனது ஹாலிவுட் படமான ‘தி கிரே மேன்’ ஷூட்டிங்கில் பிசியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இறுதிக்கட்டத்தை எட்டவுள்ள இப்படத்திற்காக படக்குழு வேகமாக பணியாற்றி வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் தனுஷ், தனது குடும்பத்துடன் தற்போது அமெரிக்காவில்‌ உள்ளார். இந்நிலையில் தனது மனைவி ஐஸ்வர்யா மற்றும் மகன்களுடன் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள திரையரங்கு ஒன்றில் ‘கர்ணன்’ படத்தை அவர் பார்த்துள்ளார். அப்போது அந்த திரையரங்கம் ஹவுஸ்புல்லாக இருந்ததை கண்டு தனுஷ் மகிழ்ச்சியடைந்துள்ளார்.இந்த தகவலை படத்தின் தயாரிப்பாளர் கலைபுலி எஸ் தாணுவிடமும் தனுஷ் கூறியுள்ளார்.