×

புதிய முதல்வரின் திட்டங்கள் சூப்பர் – இயக்குனர் ஷங்கர் பாராட்டு

புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு இயக்குனர் ஷங்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 159 இடங்களை கைப்பற்றி சாதனை படைத்தது. இதையடுத்து கவர்னர் மாளிகையில் இன்று நடைபெற்ற எளிய விழாவில் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார் மு.க.ஸ்டாலின். முதல்வரோடு இணைந்து 34 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். முதல்வராக பதவியேற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலினுக்கு அரசியல்வாதிகளும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பதவியேற்ற பிறகு தலைமை செயலகம் சென்ற ஸ்டாலின், 5 முக்கிய கோப்புகளில்
 

புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு இயக்குனர் ஷங்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 159 இடங்களை கைப்பற்றி சாதனை படைத்தது. இதையடுத்து கவர்னர் மாளிகையில் இன்று நடைபெற்ற எளிய விழாவில் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார் மு.க.ஸ்டாலின். முதல்வரோடு இணைந்து 34 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

முதல்வராக பதவியேற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலினுக்கு அரசியல்வாதிகளும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பதவியேற்ற பிறகு தலைமை செயலகம் சென்ற ஸ்டாலின், 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் கொரானா நிவாரண நிதியாக ரூ.4000, ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு, சாதாரண கட்டண பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம், தனியார் மருத்துவமனையில் இலவச கொரானா சிகிச்சை, புகார் மனுவுக்கு 100 நாளில் தீர்வு ஆகியவை அடங்கும்.

இந்த திட்டங்களை வரவேற்று இயக்குனர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில், தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள். முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை, சாதாரண பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் ஆகிய கோப்புகளில் கையெழுத்திட்டதற்காக பாராட்டுக்கள் என கூறியுள்ளார்.