உங்கள் பணி சிறக்கட்டும் – நடிகர் செந்தில் வாழ்த்து!…

உங்கள் பணி சிறக்கட்டும் – நடிகர் செந்தில் வாழ்த்து!…

முதல்வராக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் செந்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உங்கள் பணி சிறக்கட்டும் – நடிகர் செந்தில் வாழ்த்து!…

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றிப்பெற்றது. இதில் திமுக மட்டும் 125 தொகுதிகளை கைப்பற்றியது. இதையடுத்து ஆட்சியமைக்க ஸ்டாலின் உரிமை கோரினார். இதைத்தொடர்ந்து இன்று காலை 9 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். எளிமையாக நடைபெற்ற இந்த விழாவில் 34 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

உங்கள் பணி சிறக்கட்டும் – நடிகர் செந்தில் வாழ்த்து!…

முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலினுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், தொண்டர்கள் என அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சூர்யாவும் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் சுவாசிப்பதற்கு உயிர்க்காற்று கூட கிடைக்காமல் மக்கள் அல்லல்படும் இந்த பேரிடர் காலத்தில், நீங்கள் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்திருப்பது மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

உங்கள் பணி சிறக்கட்டும் – நடிகர் செந்தில் வாழ்த்து!…

இதேபோன்று நடிகர் சிவகுமார் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழில் படித்தால் வேலை என்ற நிலையை உருவாகவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இந்நிலையில் பிரபல காமெடி நடிகர் செந்தில், முதல்வராக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று தமிழக முதல்வராக பொறுப்பு ஏற்று இருக்கும் உயர்திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் பணி சிறக்கட்டும். தமிழகம் முன்னேறட்டும் என்று கூறியுள்ளார். தொடர்ந்து சினிமா பிரபலங்கள் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

.

Share this story