×

‘தளபதி 65’ படத்தில் இணைந்த பிரபல ஒளிப்பதிவாளர்!

பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தில் இணைந்துள்ளதாக அவரே தெரிவித்துள்ளார். ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தென்னிந்தியாவில் முன்னணி ஒளிப்பதிவாளராக வலம் வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த நண்பன் படத்திலும் மனோஜ் தான் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்தார். என்னை நோக்கி பாயும் தோட்டா, தற்போது பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ராதே ஷியாம் படத்திற்கும் மனோஜ் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி வருகிறார். தற்போது நெல்சன் திலீப்குமா இயக்கத்தில் விஜய்
 

பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தில் இணைந்துள்ளதாக அவரே தெரிவித்துள்ளார்.

ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தென்னிந்தியாவில் முன்னணி ஒளிப்பதிவாளராக வலம் வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த நண்பன் படத்திலும் மனோஜ் தான் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்தார். என்னை நோக்கி பாயும் தோட்டா, தற்போது பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ராதே ஷியாம் படத்திற்கும் மனோஜ் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி வருகிறார்.

தற்போது நெல்சன் திலீப்குமா இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தில் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவாளராக இணைந்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “இந்த மாநில மக்களால் அதிகமாக்க நேசிக்கப்படும், அதே நேரத்தில் மிக விரைவில் இந்த நாட்டு மக்களால் நேசிக்கப்பட இருக்கும் இந்த அற்புதமான மனிதருடன் மற்றுமொரு படத்தில் பயணிக்க இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்…. நண்பன் படத்தில் விட்டதிலிருந்து மீண்டும் தொடங்க உள்ளோம். தளபதி 65 இந்தியா முழுவதையும் திரும்புப் பார்க்க வைக்கும். எல்லோரும் தயாராகுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

தளபதி 65 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.