×

பாபநாசம் 2 உருவாகிறதா ?… கமலுக்காக காத்திருக்கும் படக்குழு…

திரிஷ்யம் 2 வெற்றிக்குப் பிறகு பாபநாசம் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2013ம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கி மோகன்லால் நடிப்பில் வெளியான படம் ‘திரிஷ்யம்’. மாபெரும் ஹிட் அடித்த இந்த படம் உலக அரங்கில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இந்த படம் தமிழ்,தெலுங்கு, இந்தி,கன்னடம் என 4 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றிப் பெற்றது. சீனமொழியிலும் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. பல மொழிகளில் வெற்றி பெற்ற இந்தப் படம் ‘பாபநாசம்’
 

திரிஷ்யம் 2 வெற்றிக்குப் பிறகு பாபநாசம் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கி மோகன்லால் நடிப்பில் வெளியான படம் ‘திரிஷ்யம்’. மாபெரும் ஹிட்‌ அடித்த இந்த படம் உலக அரங்கில்‌ நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இந்த படம் தமிழ்,தெலுங்கு, இந்தி,கன்னடம் என 4 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றிப் பெற்றது. சீனமொழியிலும் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது.

பல மொழிகளில் வெற்றி பெற்ற இந்தப் படம் ‘பாபநாசம்’ என்ற பெயரில் தமிழில் ரீமேக்கானது. கமல் நடித்த இந்த படத்தில் மலையாளத்தில் மீனா நடித்த கதாபாத்திரத்தில் கவுதமி நடித்திருந்தார். மலையாளத்தை போன்று இல்லாமல் தமிழுக்கு ஏற்றாற்போல் சிறிய அளவு மாற்றங்கள் செய்யப்பட்டு வெளியானது.

இந்நிலையில் திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் இன்று ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தைபோன்று இரண்டாம் பாகமும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நடிகர் கமலிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. கமல் தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் பிசியாக இருப்பதால் தேர்தல் கழித்து இந்த படம் குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.