ஹாலிவுட்டில் ரீமேக்காகும் ‘திரிஷ்யம்’… இயக்குனர் வெளியிட்ட புதிய தகவல் !

ஹாலிவுட்டில் ரீமேக்காகும்  ‘திரிஷ்யம்’… இயக்குனர் வெளியிட்ட புதிய தகவல் !

மலையாளத்தில் மாபெரும் ஹிட் அடித்த திரிஷ்யம் படம் ஹாலிவுட்டில் ரீமேக்காகப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்து கடந்த 2013ம் ஆண்டு வெளியான படம் ‘திரிஷ்யம்’. இந்த படத்தில் ஹீரோயினாக நடிகை மீனா நடித்திருந்தார். மாபெரும் வெற்றிப்பெற்ற இந்த படம் இந்திய அளவில் கொண்டாடப்பட்டது. தெரியாமல் நடந்த ஒரு குற்றத்திலிருந்து தனது குடும்பத்தை எவ்வாறு கதாநாயகன் காப்பாற்றுகிறார் என்பதுதான் படத்தின் ஒன்லைன் கதை.

ஹாலிவுட்டில் ரீமேக்காகும்  ‘திரிஷ்யம்’… இயக்குனர் வெளியிட்ட புதிய தகவல் !

இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த இந்த படம் பலமொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றிப்பெற்றது. தமிழில் கமல் நடித்து பாபநாசம் என்ற பெயரில் வெளியானது. அதன்பிறகு தெலுங்கில் வெங்கடேஷ் நடிப்பிலும், கன்னடத்தில் ரவிச்சந்திரன் நடிப்பிலும், ஹிந்தியில் அஜய் தேவ்கன் நடிப்பிலும் வெளியாகி மலையாளத்தை போன்று மற்ற மொழிகளிலும் ஹிட் அடித்து வசூலை வாரி குவித்தது.

ஹாலிவுட்டில் ரீமேக்காகும்  ‘திரிஷ்யம்’… இயக்குனர் வெளியிட்ட புதிய தகவல் !

இந்த படம் இந்தியாவை தாண்டி சீனாவிலும் ரீமேக் செய்யப்பட்டு வெற்றிப்பெற்றது. இதையடுத்து 7 வருடங்களுக்கு பிறகு திரிஷ்யம் 2 வெளியாக உள்ளது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. ஜீத்து ஜோசப்பே இயக்கியுள்ள இந்த படம் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது.

ஹாலிவுட்டில் ரீமேக்காகும்  ‘திரிஷ்யம்’… இயக்குனர் வெளியிட்ட புதிய தகவல் !

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்த திரிஷ்யம் படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப், இந்த படம் ஹாலிவுட்டில் ரீமேக்காக உள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்காக ஹாலிவுட்டில் பணிபுரியும் இந்தியர் ஒருவர் தன்னை அணுகி ரீமேக் செய்ய ஆர்வமாக உள்ளதாக கூறியுள்ளார். இதையடுத்து திரிஷ்யம் படத்தின் ஆங்கில ஸ்கிப்ட்டை அந்த இயக்குனரிடம் தந்துள்ளதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறியுள்ளார்.

ஹாலிவுட்டில் ரீமேக்காகும்  ‘திரிஷ்யம்’… இயக்குனர் வெளியிட்ட புதிய தகவல் !

ஹாலிவுட்டில் மலையாளத்தை போன்று இல்லாமல் ஸ்கிப்ட்டில் சில மாற்றங்களை செய்துள்ளதாக ஜீத்து ஜோசப் கூறியுள்ளார். இங்கு தடையங்களை ஹீரோதான் மறைத்து தன் குடும்பத்தை காப்பாற்றுவது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் ஹாலிவுட்டில் ஹீரோயின் தடயங்களை மறைப்பது போன்று காட்சிகள் இருக்கும். இந்த கதாபாத்திரத்தில் ஆஸ்கார் விருது பெற்ற நடிகை ஹிலாரி சுவாங் நடிப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

Share this story