×

பிரபாஸ், ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணியில் உருவாகும் பிரம்மாண்டப் படம்!

பிரபாஸ் மற்றும் ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணியில் பெரிய அளவில் பிரமாண்டமாக ஒரு படம் உருவாக இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரபாஸ் தற்போது இந்தியா, முழுவதும் ரிலீஸ் ஆகக்கூடிய நான்கு பிரம்மாண்டப் படங்களைக் கையில் வைத்துள்ளார். ‘ராதே ஷ்யாம்’ படத்தில் நடித்து முடித்துள்ள பிரபாஸ் அதன் ரிலீசுக்காகக் காத்திருக்கிறார். தற்போது ஓம் ரவுத் இயக்கத்தில் ‘ஆதி புருஷ்’ படத்திலும், பிரஷாந்த் நீல் இயக்கத்தில் ‘சலார்’ படத்திலும் நடித்து வருகிறார். நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிக்கவும் தயாராகி வருகிறார்.
 

பிரபாஸ் மற்றும் ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணியில் பெரிய அளவில் பிரமாண்டமாக ஒரு படம் உருவாக இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரபாஸ் தற்போது இந்தியா, முழுவதும் ரிலீஸ் ஆகக்கூடிய நான்கு பிரம்மாண்டப் படங்களைக் கையில் வைத்துள்ளார். ‘ராதே ஷ்யாம்’ படத்தில் நடித்து முடித்துள்ள பிரபாஸ் அதன் ரிலீசுக்காகக் காத்திருக்கிறார்.

தற்போது ஓம் ரவுத் இயக்கத்தில் ‘ஆதி புருஷ்’ படத்திலும், பிரஷாந்த் நீல் இயக்கத்தில் ‘சலார்’ படத்திலும் நடித்து வருகிறார். நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிக்கவும் தயாராகி வருகிறார்.

தற்போது பிரபாஸ் மற்றும் ஹ்ரித்திக் ரோஷன் இணைந்து பிரம்மாண்ட படம் ஒன்றில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. வார் படத்தை இயக்கிய சித்தார்த் ஆனந்த் என்பவர் இயக்கத்தில் இருவரும் இணைந்து நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்திய சினிமா வரலாற்றில் மிகப்பெரிய மல்டி ஸ்டாரர் படமாக இது இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தை யாஷ் ராஜ் தயாரிக்க இருக்கிறாராம்.

இந்த செய்தி உண்மையாக இருந்தால் பிரபாஸ் தான் உண்மையாகவே அகில இந்திய சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படுவார்.