×

ஆர்ஜே பாலாஜியுடன் மீண்டும் ஜோடி சேரும் ப்ரியா ஆனந்த்!

இந்தியில் வெளியான ‘பதாய் ஹோ’ படத்தின் தமிழ் ரீமேக்கில் ஆர்ஜே பாலாஜி உடன் நடிகை ப்ரியா ஆனந்த் ஜோடி சேர இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2018-ம் ஆண்டு இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் அமித் ரவிந்த்ரநாத் இயக்கத்தில் வெளியான ‘பதாய் ஹோ’ என்ற திரைப்படம் அங்கு பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. 28 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 220 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. தற்போது இந்தப் படம் தமிழில் இப்படம் ரீமேக் ஆகவிருக்கிறது. இந்த தமிழ்
 

இந்தியில் வெளியான ‘பதாய் ஹோ’ படத்தின் தமிழ் ரீமேக்கில் ஆர்ஜே பாலாஜி உடன் நடிகை ப்ரியா ஆனந்த் ஜோடி சேர இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

2018-ம் ஆண்டு இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் அமித் ரவிந்த்ரநாத் இயக்கத்தில் வெளியான ‘பதாய் ஹோ’ என்ற திரைப்படம் அங்கு பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.

28 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 220 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. தற்போது இந்தப் படம் தமிழில் இப்படம் ரீமேக் ஆகவிருக்கிறது.

இந்த தமிழ் ரீமேக்கை ஆர்ஜே பாலாஜி இயக்கி நடிக்கிறாராம். தற்போது இந்தப் படத்தில் ப்ரியா ஆனந்த் கதாநாயகியாக நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கு முன்னர் ‘எல்கேஜி’ படத்தில் இவர்களின் ஜோடி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்தப் படத்திலும் இந்த ஜோடி இணையவிருப்பது படத்திற்க்கு கூடுதல் பலம் தான்.

மேலும் சத்யராஜ் இப்படத்தில் ஆர்ஜே பாலாஜியின் அப்பா கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். போனி கபூர் இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ளார்.

இந்தப் படத்திற்கு ‘வீட்ல விஷேசங்க’ என்று தலைப்பும் வைத்துவிட்டார்களாம். இதுகுறித்து ஆர்ஜே பாலாஜி இயக்குனர் பாக்யராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.