×

‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் தமிழக உரிமையை பெரிய தொகைக்கு கைப்பற்றிய லைகா நிறுவனம்!

ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஆர்ஆர்ஆர்’திரைப்படத்தின் தமிழக தியேட்டர் உரிமையை லைகா நிறுவனம் பெரிய தொகைக்கு கைப்பற்றியுள்ளது. ‘பாகுபலி’ என்னும் பிரம்மாண்டப் படைப்பிற்குப் பின்னர் இயக்குனர் ராஜமவுலி இயக்கி வரும் மற்றொரு பிரம்மாண்ட படைப்பு ’ஆர்.ஆர்.ஆர்’. அல்லுரி சிதாராமாஜு, கொமாராம் பீம் என்ற இரண்டு சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகி வருகிறது. ராமராஜுவாக ராம் சரணும், கொமாரம் பீமாக ஆக ஜூனியர் என்டிஆரும் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் அஜய் தேவ்கன், ஆலியா பாட்,
 

ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஆர்ஆர்ஆர்’திரைப்படத்தின் தமிழக தியேட்டர் உரிமையை லைகா நிறுவனம் பெரிய தொகைக்கு கைப்பற்றியுள்ளது.

‘பாகுபலி’ என்னும் பிரம்மாண்டப் படைப்பிற்குப் பின்னர் இயக்குனர் ராஜமவுலி இயக்கி வரும் மற்றொரு பிரம்மாண்ட படைப்பு ’ஆர்.ஆர்.ஆர்’. அல்லுரி சிதாராமாஜு, கொமாராம் பீம் என்ற இரண்டு சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகி வருகிறது.

ராமராஜுவாக ராம் சரணும், கொமாரம் பீமாக ஆக ஜூனியர் என்டிஆரும் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் அஜய் தேவ்கன், ஆலியா பாட், சமுத்திரகனி, ஷ்ரேயா சரண் உள்ளிட்ட நட்சத்திரங்களும் நடித்து வருகின்றனர்.

இப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வரும் அக்டோபர் மாதம் 13-ம் தேதி வெளியாக இருக்கிறது.

தற்போது ஆர்ஆர்ஆர் படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை லைகா நிறுவனம் பெரிய தொகை கொடுத்து கைப்பற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. லைகா நிறுவனம் கத்தி, எந்திரன் 2, தர்பார், இந்தியன் 2 உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களை தயாரித்துள்ளனர். அந்த வரிசையில் தற்போது ஆர்ஆர்ஆர் படத்தையும் தமிழில் வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.