×

இறுதிக்கட்ட ஷூட்டிங்கில் படக்குழு… வெளியானது ‘மாநாடு’ படத்தின் புதிய அப்டேட்…

சிம்பு நடிப்பில் உருவாகும் ‘மாநாடு’ படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங்கிற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. வெங்கட் பிரபு-சிம்பு கூட்டணியில் உருவாகி வரும் படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரித்து வரும் இப்படத்தில் சிம்புக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, படவா கோபி, அஞ்சனா கீர்த்தி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என
 

சிம்பு நடிப்பில் உருவாகும் ‘மாநாடு’ படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங்கிற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

வெங்கட் பிரபு-சிம்பு கூட்டணியில் உருவாகி வரும் படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரித்து வரும் இப்படத்தில் சிம்புக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, படவா கோபி, அஞ்சனா கீர்த்தி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. கடந்த மாதம் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அரசியலை படமாக இந்த படம் உருவாகி வருவதால் படக்குழு கொஞ்சம் மெனக்கெட்டு வேலைப்பார்த்து வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் ஷூட்டிங் சென்னை, பாண்டிச்சேரி, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று முடிந்துள்ளது.

இந்நிலையில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை ஒரு அரசியல் மாநாடு செட்டில் படமாக்கவிருக்கிறதாம் படக்குழு. இதற்காக ஒரு பிரமாண்ட செட் போடும் பணி துவங்கி உள்ளது. இந்த ஷூட்டிங் முடிந்தால் படத்தின் ஷூட்டிங்கின் பணிகள் மொத்தமாக முடிவடையும். இதையடுத்து தயாரிப்பு பணிகள் வேகமாக தொடங்கி முடித்து படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.