×

விக்னேஷ் சிவன் படத்தில் நடிகையாக அறிமுகமாகும் சிவகார்த்திகேயன் பட பாடகி!

இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகவிருக்கும் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம் படத்தில் பிரபல பாடகி ஜோனிடா காந்தி நடிக்கவுள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ரௌடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம்மூலம் வரிசையாக பல படங்கள் தயாரித்து வருகிறார். ஏற்கனவே ராக்கி, கூழாங்கல், காதுவக்குல ரெண்டு காதல், நெற்றிக்கண் உள்ளிட்ட படங்களைத் தயாரித்து வருகிறது ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம். தற்போது புதிய படம் ஒன்றை இந்நிறுவனம் தயாரிக்க உள்ளது. அந்தப் படத்திற்கு ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப்
 

இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகவிருக்கும் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம் படத்தில் பிரபல பாடகி ஜோனிடா காந்தி நடிக்கவுள்ளார்.

இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ரௌடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம்மூலம் வரிசையாக பல படங்கள் தயாரித்து வருகிறார். ஏற்கனவே ராக்கி, கூழாங்கல், காதுவக்குல ரெண்டு காதல், நெற்றிக்கண் உள்ளிட்ட படங்களைத் தயாரித்து வருகிறது ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம்.

தற்போது புதிய படம் ஒன்றை இந்நிறுவனம் தயாரிக்க உள்ளது. அந்தப் படத்திற்கு ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் விநாயக் என்பவர் இயக்கவுள்ளார். சூரரைப் போற்று படத்தில் சூர்யாவின் நண்பனாக நடித்த கிருஷ்ணகுமார் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.

தற்போது இந்தப் படத்தில் பிரபல பாடகி ஜோனிடா காந்தி இணைந்துள்ளார். சமீபத்தில் ‘டாக்டர்’ படத்தில் இடம் பெற்ற ‘செல்லம்மா’ பாடலை ஜோனிடா காந்தி பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ரொமான்டிக் காமெடி படமாக இப்படம் உருவாக்கவிருக்கிறது. சென்னை மற்றும் பாண்டிசேரியில் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. இன்று படத்தின் வேலைகள் பூஜையுடன் துவங்கியுள்ளது. பூஜையில் விக்னேஷ் சிவன், கிருஷ்ணகுமார், ஜோனிடா காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.