×

சசிகுமார்- ஐஸ்வர்யா ராஜேஷ் கூட்டணியில் ரீமேக் ஆகும் பாக்யராஜின் சூப்பர் ஹிட் படம்!

பாக்யராஜின் முந்தானை முடிச்சு படத்தின் ரீமேக்கை சுந்தரபாண்டியன் பட இயக்குனர் எஸ்ஆர் பிரபாகரன் இயக்கவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1983-ம் ஆண்டு கே.பாக்யராஜ் இயக்கி, நடித்து வெளியான படம் ‘முந்தானை முடிச்சு’ படம் மாபெரும் வரவேற்பு பெற்றது. இந்தப் படத்தில் ஊர்வசி, பூர்ணிமா பாக்யராஜ், கோவை சரளா உள்ளிட்டபலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்போதும் பல ரசிகர்கள் இப்படத்தை அதே ஆவலுடன் பார்த்து வருகின்றனர். தற்போது முந்தானை முடிச்சு படம் வெளியாகி 37 ஆண்டுகள்
 

பாக்யராஜின் முந்தானை முடிச்சு படத்தின் ரீமேக்கை சுந்தரபாண்டியன் பட இயக்குனர் எஸ்ஆர் பிரபாகரன் இயக்கவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1983-ம் ஆண்டு கே.பாக்யராஜ் இயக்கி, நடித்து வெளியான படம் ‘முந்தானை முடிச்சு’ படம் மாபெரும் வரவேற்பு பெற்றது. இந்தப் படத்தில் ஊர்வசி, பூர்ணிமா பாக்யராஜ், கோவை சரளா உள்ளிட்ட
பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்போதும் பல ரசிகர்கள் இப்படத்தை அதே ஆவலுடன் பார்த்து வருகின்றனர்.

தற்போது முந்தானை முடிச்சு படம் வெளியாகி 37 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இந்த ரீமேக்கிற்கு கதை, திரைக்கதை, வசனத்தை கே.பாக்யராஜ் எழுதியுள்ளார்.

சசிகுமார் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். ஜேஎஸ்பி நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் அறிவிப்பு போன வருடமே வெளியானது.

தற்போது இந்த ரீமேக்கை சசிகுமாரின் சுந்தரபாண்டியன், கொம்பு வச்ச சங்கம்டா படங்களை இயக்கிய எஸ்ஆர் பிரபாகரன் இயக்கவுள்ளார்.

பிரபாகரன், சசிகுமார், ஜேஎஸ்பி கூட்டணி மூன்றாவது முறையாக இப்படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தின் வேலைகள் விரைவில் துவங்க உள்ளது.