×

மீண்டும் இணையும் மெர்சல் கூட்டணி… ‘விஜய் 66’ சூப்பர் அடேட்… #thalapathy 66

விஜய் நடிப்பில் உருவான மெர்சல் படத்தின் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் – நெல்சன் கூட்டணியில் புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது. விஜய்யின் 65வது படமாகும் உருவாகும் பெயரிடப்படாத இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இப்படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாதம் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் பணிகளை 60 நாட்களில் முடித்து
 

விஜய் நடிப்பில் உருவான மெர்சல் படத்தின் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் – நெல்சன் கூட்டணியில் புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது. விஜய்யின் 65வது படமாகும் உருவாகும் பெயரிடப்படாத இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இப்படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாதம் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் பணிகளை 60 நாட்களில் முடித்து இந்த இறுதியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது படக்குழு. நடிகர்கள் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் காமெடி நடிகர் யோகிபாபும், குக் வித் கோமாளி புகழும் இந்த படத்தில் இணையவுள்ளனர்.

இந்த படத்தின் பணிகளே இப்போதுதான் விறுவிறுவடைந்துள்ள நிலையில் விஜய் 66வது படத்தை அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. விஜய்யின் 66வது படத்தை யார் இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அப்போது ஏற்கனவே விஜய்யின் மெர்சல் படத்தை இயக்கிய அட்லிக்கும், மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ்-க்கும் கடும் போட்டி இருந்தது. இதையடுத்து மெர்சல், பிகில் படங்களை இயக்கிய அட்லியின் கதை, விஜய்க்கு பிடித்திருப்பதாகவும், அதனால் அடுத்த படத்தில் அட்லியுடன் பணியாற்ற விஜய் ஓகே சொல்லிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அட்லி-விஜய் கூட்டணி மூன்றாவது முறையாக இணையும் இந்த படம் ஹாட்ரிக் வெற்றிப்பெறும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.