விஜய் 65-யில் இணைந்த பிரபல காமெடி நடிகர்… அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு..

விஜய் 65-யில் இணைந்த பிரபல காமெடி நடிகர்… அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு..

நடிகர் விஜய் – நெல்சன் கூட்டணியில் உருவாகவுள்ள படத்தில் பிரபல காமெடி நடிகர் ஒருவர் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் அடுத்து நடிக்க இருக்கிற படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. விஜய்யின் 65வது படமாகும் உருவாகும் பெயரிடப்படாத இப்படத்தை ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ படங்களை இயக்கிய நெல்சன் இயக்குகிறார். அனிரூத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் 65-யில் இணைந்த பிரபல காமெடி நடிகர்… அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு..

இந்த படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. வரும் ஏப்ரலில் தொடங்கும் இந்த படத்தின் பணிகள் 60 நாட்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது படக்குழு. இதையடுத்து இந்த படத்தின் போட்டோஷூட் ஒன்று சன் குழும ஸ்டுடியோவில் நடந்துள்ளது. அதில் விஜய் கலந்துகொண்டு புகைப்படங்களை எடுத்துள்ளார். அப்போது விஜய்க்கு ஒரு மாஸ் லுக் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதைப் பார்த்து படக்குழுவினர் ஆச்சர்யப்பட்டதாக கூறப்படுகிறது.

விஜய் 65-யில் இணைந்த பிரபல காமெடி நடிகர்… அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு..

இந்நிலையில் பிரபல காமெடி நடிகர் யோகிபாபு இந்த படத்தில் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் ‘குக் வித் கோமாளி’ புகழ் நடிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் 65 குறித்த அப்டேட் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Share this story