×

‘தோழா’ பட இயக்குனருடன் கைகோர்க்கும் விஜய்!?

தெலுங்கு இயக்குனர் வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டு வருகிறது. விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். பூஜா ஹெக்டே இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர். சமீபத்தில் தான் ஜார்ஜியா சென்று 16 நாட்கள் வரை படப்பிடிப்பு நடத்தினர். இதற்கிடையில் விஜய் தனது அடுத்த படத்தில் யாருடன் நடிக்க இருக்கிறார் என்று எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது. மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படம்
 

தெலுங்கு இயக்குனர் வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டு வருகிறது.

விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். பூஜா ஹெக்டே இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர். சமீபத்தில் தான் ஜார்ஜியா சென்று 16 நாட்கள் வரை படப்பிடிப்பு நடத்தினர்.

இதற்கிடையில் விஜய் தனது அடுத்த படத்தில் யாருடன் நடிக்க இருக்கிறார் என்று எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது. மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.

தற்போது விஜய் தெலுங்கு இயக்குனர் வம்ஷி படைப்பள்ளி இயக்கத்தில் பபுதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த இயக்குனர் கார்த்தி மற்றும் நாகார்ஜுனா நடிப்பில் வெளியான தோழா படத்தை இயக்கியவர். கடைசியாக மகேஷ் பாபு நடிப்பில் மகரிஷி படத்தை இயக்கினார்.

தற்போது இயக்குனர் வம்ஷி விஜய்க்காக கதை ஒன்றை எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது. பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு இந்தப் படத்தைத் தயாரிக்க இருப்பதாகவும் படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஒரு பக்கம் தமிழ் இயக்குனர்கள் டோலிவுட் பக்கம் செல்ல, மறுபக்கம் டோலிவுட் இயக்குனர்கள் தமிழ் பக்கம் திரும்பி வருவது குறிப்பிடத்தக்கது.