விவேக் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய விஜய்!

விவேக் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய விஜய்!

நடிகர் விஜய், மறைந்த நடிகர் விவேக் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார்.

விஜய் தான் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா சென்றுவிட்டு நேற்று தான் சென்னை திரும்பினார்.

வந்ததும் முதல் வேலையாக மறைந்த நடிகர் விவேக் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறியுள்ளார். விஜய் மற்றும் விவேக் இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள் என்பது கோலிவுட் வட்டாரத்தில் அனைவர்க்கும் தெரியும்.

விவேக் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய விஜய்!

குஷி ப்ரியமானவளே, தமிழன், ஷாஜகான், உதயா, திருமலை, ஆதி, குருவி, பிகில் என பல படங்கள் விஜய்- விவேக் கூட்டணி இணைந்து நடித்துள்ளனர். கோலிவுட்டில் மிகவும் வரவேற்பைப் பெற்ற காம்போவில் இவர்களும் உண்டு.

விவேக் கடந்த ஏப்ரல் 17-ம் தேதி மறைந்தார். அப்போது விஜய் ஜார்ஜியாவில் இருந்ததால் அவரால் விவேக்கின் இறுதி சடங்குகளில் கலந்துகொள்ள முடியவில்லை. தற்போது சென்னை திரும்பிய உடன் விவேக் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார்.

Share this story