×

உங்க விருதே வேணாம், வச்சுக்குங்க… Behindwoods விருதைத் திருப்பிக் கொடுத்த பிக்பாஸ் பாலாஜி… என்ன காரணம் தெரியுமா!?

பாலாஜி முருகதாஸ் தனக்கு வழங்கப்பட்ட Behindwoods விருதைத் திருப்பிக் கொடுத்துள்ளார். மாடல் மற்றும் விளம்பர நடிகரான பாலாஜி முருகதாஸ் பிக்பாஸ் 4-வந்து சீசனில் கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார். பிக்பாஸ் வீட்டிற்குள் கம்பீரமான ஒரு போட்டியாளராக வலம் வந்தார். அதே நேரத்தில் அகந்தையுடன் செயல்பட்டதாகவும் பலர் கருதினர். ஆரிக்கு அடுத்த படியாக அதிக ரசிகர்களைக் கொண்ட போட்டியாளர் பாலாஜி தான். சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற Behindwoods விருது விழாவில் பாலாஜிக்கு Biggest Sensation on Television என்ற
 

பாலாஜி முருகதாஸ் தனக்கு வழங்கப்பட்ட Behindwoods விருதைத் திருப்பிக் கொடுத்துள்ளார்.

மாடல் மற்றும் விளம்பர நடிகரான பாலாஜி முருகதாஸ் பிக்பாஸ் 4-வந்து சீசனில் கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார். பிக்பாஸ் வீட்டிற்குள் கம்பீரமான ஒரு போட்டியாளராக வலம் வந்தார். அதே நேரத்தில் அகந்தையுடன் செயல்பட்டதாகவும் பலர் கருதினர். ஆரிக்கு அடுத்த படியாக அதிக ரசிகர்களைக் கொண்ட போட்டியாளர் பாலாஜி தான்.

சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற Behindwoods விருது விழாவில் பாலாஜிக்கு Biggest Sensation on Television என்ற விருது வழங்கப்பட்டது. அப்போது மேடை ஏறிய பாலாஜி தொகுப்பாளர் குறித்து சர்ச்சையாகப் பேசியதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனவே பாலாஜியின் வீடியோவைத் தற்போது வரை Behindwoods வெளியிடவில்லை. இதன் காரணமாகத் தான் பாலாஜி தன் விருதைத் திருப்பி அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “எனவே இது தான் Behindwoods. ஒருவரைத் தவிர மற்ற எல்லா பிக்பாஸ் போட்டியாளர்களையும் மதிப்பாய்வு என்ற பெயரில் களங்கப்படுத்தியதற்கு உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்.

உங்களின் சொந்த மேடையில் உங்கள் தொகுப்பாளர்களைப் பற்றி நான் சொன்ன எனது 2 நிமிட கருத்தைக் கூட உங்களால் எடுத்துக்கொள்ள முடியவில்லை. எனவே தான் அவர்கள் நான் விருது வாங்கிய பேச்சையோ அல்லது தருணத்தையோ ஒளிபரப்பவில்லை. பேசுவது சரியானது என்று நான் நினைக்கிறேன்.

நான் எந்தவொரு பின்னணியும் இல்லாமல் வந்தவன். ஆம் !
அது ஒருபோதும் நான் நினைத்ததைப் பேசுவதைத் தடுக்காது.” என்று சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட பதிவில் தெரிவித்திருந்தார்.

தற்போது வெளியிட்டுள்ள பதிவில் “நான் Behindwoods விருது விழாவில் பேசியது இது தான். தயவுசெய்து போட்டியாளர்களின் நடத்தையை மதிப்பாய்வு என்ற பெயரில் படுகொலை செய்யாதீர்கள். இது எதிர்கால போட்டியாளர்களை பாதிக்கும். மேலும் விமர்சகர்கள் அனைவரும் மகாத்மா காந்தி அல்லது அன்னை தெரசா அல்ல.
நான் பேசியதற்கு மட்டுமே நான் பொறுப்பேற்க முடியும்
நன்றி.” என்று தெரிவித்துள்ளார்.