×

கொரானா பேரிடர் நிதி. முதல்வரை நேரில் சந்தித்து 10 லட்ச ரூபாய் வழங்கினார் இயக்குனர் வெற்றிமாறன்

கொரானா பேரிடர் நிவாரண நிதியாக 10 லட்சம் ரூபாயை இயக்குனர் வெற்றிமாறன், முதலமைச்சரை நேரில் சந்தித்து வழங்கினார். தமிழகத்தில் கொரானாவின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. முதல் அலையைவிட 2வது அலை கொடூரமாக இருப்பதால் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுபாடுகளை கொண்டு வந்துள்ளது தமிழக அரசு. ஆக்சிஜன் தட்டுபாட்டால் அரசு மருத்துவமனைகளில் உயிரிழப்புகள் நிகழ்ந்து வருகிறது. இதை சமாளிக்க தாராள நிதியுதவி அளிக்குமாறு தமிழக மக்களை கேட்டுக்கொண்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதன் அடிப்படையில் அரசிவாதிகள், முக்கிய பிரமுகர்கள், சினிமா
 

கொரானா பேரிடர் நிவாரண நிதியாக 10 லட்சம் ரூபாயை இயக்குனர் வெற்றிமாறன், முதலமைச்சரை நேரில் சந்தித்து வழங்கினார்.

தமிழகத்தில் கொரானாவின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. முதல் அலையைவிட 2வது அலை கொடூரமாக இருப்பதால் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுபாடுகளை கொண்டு வந்துள்ளது தமிழக அரசு. ஆக்சிஜன் தட்டுபாட்டால் அரசு மருத்துவமனைகளில் உயிரிழப்புகள் நிகழ்ந்து வருகிறது. இதை சமாளிக்க தாராள நிதியுதவி அளிக்குமாறு தமிழக மக்களை கேட்டுக்கொண்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அதன் அடிப்படையில் அரசிவாதிகள், முக்கிய பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்கள் நிவாரண நிதியை அளித்து வருகின்றனர். ஏற்கனவே நடிகர் சூர்யா குடும்பம் சார்பில் 1 கோடியும், நடிகர் அஜீத் 25 லட்சமும், கவிஞர் வைரமுத்து 5 லட்சமும், இயக்குனர் ஷங்கர் 10 லட்சமும் அளித்துள்ளனர். அந்த வரிசையில் பிரபல இயக்குனர் வெற்றிமாறன், முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து 10லட்ச ரூபாய் வழங்கினார்.