×

கொரானா நிவாரண நிதி. 10லட்சம் ரூபாய் வழங்கினார் இயக்குனர் ஷங்கர்

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பிரபல இயக்குனர் ஷங்கர் 10 லட்சம் ரூபாய் அளித்துள்ளார். இந்தியா முழுவதும் கொரானா தொற்றின் தீவிரம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நாட்டிலேயே மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில்தான் உச்சபட்ச பாதிப்பு நிலவி வருகிறது. இதில் தமிழகத்தில் கொரானா தொற்றின் பாதிப்பை குறைக்க ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. கொரானா தொற்று தாக்குதலை குறைக்கும் வகையில் புதிய மருத்துவமனைகளையும், ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க வெளி சந்தையில்
 

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பிரபல இயக்குனர் ஷங்கர் 10 லட்சம் ரூபாய் அளித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரானா தொற்றின் தீவிரம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நாட்டிலேயே மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில்தான் உச்சபட்ச பாதிப்பு நிலவி வருகிறது. இதில் தமிழகத்தில் கொரானா தொற்றின் பாதிப்பை குறைக்க ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

கொரானா தொற்று தாக்குதலை குறைக்கும் வகையில் புதிய மருத்துவமனைகளையும், ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க வெளி சந்தையில் இருந்து ஆக்சிஜனை வாங்கப்படுகிறது. இதேபோன்று கொரானா தடுப்பூசிகளையும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து வருகிறது. இதற்கு தேவையான நிதி ஆதாரங்களை சமாளிக்க, முதலமைச்சர் நிவாரண நிதி அளிக்குமாறு தமிழக அரசு கேட்டுக்கொண்டது.

இதையடுத்து சினிமாத்துறை சார்பில் நடிகர் சூர்யா 1கோடியும், நடிகர் உதயநிதி 25 லட்சமும், நடிகர் அஜீத் 25 லட்சமும், இயக்குனர் முருகதாஸ் 25 லட்சமும், நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா 1கோடியும், நடிகர் வைரமுத்து 5 லட்சமும் வழங்கியுள்ளனர். இந்நிலையில் பிரபல இயக்குனர் ஷங்கர், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாய் அளித்துள்ளார். இதேபோன்று பல்வேறு தரப்பினரும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.