×

‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் டிஜிட்டல் உரிமைகளைக் கைப்பற்றிய நிறுவனங்களின் பட்டியல்!

ஆர்ஆர்ஆர் படத்தின் டிஜிட்டல் உரிமைகளைக் கைப்பற்றிய நிறுவனங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகியுள்ள ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு இந்தியா முழுவதும் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆர்ஆர்ஆர் படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை லைகா நிறுவனம் பெரிய தொகை கொடுத்து கைப்பற்றியுள்ளது. படத்தின் இந்தி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மற்ற மொழி உரிமையை ZEE5 நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தமிழ் தொலைக்காட்சி உரிமையை விஜய் டிவி, தெலுங்கில் ஸ்டார்
 

ஆர்ஆர்ஆர் படத்தின் டிஜிட்டல் உரிமைகளைக் கைப்பற்றிய நிறுவனங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகியுள்ள ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு இந்தியா முழுவதும் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

ஆர்ஆர்ஆர் படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை லைகா நிறுவனம் பெரிய தொகை கொடுத்து கைப்பற்றியுள்ளது. படத்தின் இந்தி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மற்ற மொழி உரிமையை ZEE5 நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

தமிழ் தொலைக்காட்சி உரிமையை விஜய் டிவி, தெலுங்கில் ஸ்டார் மா, மலையாளத்தில் ஆசியாநெட், இந்தியில் ZEECinema, கன்னடத்தில் ஸ்டார் கன்னடா ஆகியவையும் கைப்பற்றியுள்ளனர்.

இங்கிலிஷ், போர்ச்சுகீஸ், கொரியன், துருக்கி, ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிடுகின்றனர்.