×

விஜய் டிவியில் இன்று நேரடியாக ஒளிபரப்பாகும் ‘ஏலே’ திரைப்படம்!

ஹலிதா ஷமீம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஏலே’ திரைப்படம் இன்று மாலை 3 மணிக்கு நேரடியாக விஜய் டிவியில் ஒளிப்பரப்பாக உள்ளது. பூவரசம் பீப்பி, சில்லுக்கருப்படி படங்களின் இயக்குனர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் ‘ஏலே‘ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, கே மணிகண்டன் இருவரும் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏலே திரைப்படம் பிப்ரவரி 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தியேட்டர்கள் உரிமையாளர்கள் வைத்த நிபந்தனைகளால் படத்தை தியேட்டரில் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது.
 

ஹலிதா ஷமீம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஏலே’ திரைப்படம் இன்று மாலை 3 மணிக்கு நேரடியாக விஜய் டிவியில் ஒளிப்பரப்பாக உள்ளது.

பூவரசம் பீப்பி, சில்லுக்கருப்படி படங்களின் இயக்குனர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் ‘ஏலே‘ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, கே மணிகண்டன் இருவரும் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஏலே திரைப்படம் பிப்ரவரி 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தியேட்டர்கள் உரிமையாளர்கள் வைத்த நிபந்தனைகளால் படத்தை தியேட்டரில் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து படக்குழு தியேட்டர் வெளியீட்டைக் கைவிட்டனர். பின்னர் ஏலே திரைப்படம் விஜய் டிவியில் நேரடியாக ஒளிபரப்பாகும் என்று அறிவித்தனர். அதன்படி இன்று மாலை 6 மணிக்கு ஏலே திரைப்படம் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. விஜய் டிவியில் தியேட்டருக்குச் செல்லாமல் நேரடியாக ஒளிப்பரப்பாகும் முதல் படம் ‘ஏலே’ தான்.

இப்படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்த்த அனைவரும் படத்தின் மீது நேர்மறையான விமர்சனங்களையே வைக்கின்றனர். சமுத்திரக்கனியின் அலப்பறையான கதாபாத்திரம் ரசிக்கும் படியாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே ஏலே படக்குழுவினர் தியேட்டர் வெளியீட்டைத் தவிர்த்துள்ளனர். ஏலே திரைப்படம் விஜய் டிவியில் நேரடியாக ஒளிபரப்பாக இருக்கிறது. பிப்ரவரி 28-ம் தேதி ஞாயிறு பகல் 3 மணிக்கு இப்படம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.