×

ஹர்பஜன் சிங் – லாஸ்லியா இணைந்து நடிக்கும் ‘பிரண்ட்ஷிப்’ படத்தின் புதிய அப்டேட்…

ஹர்பஜன் சிங் – லாஸ்லியா இணைந்து நடிக்கும் ‘பிரண்ட்ஷிப்’ படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு நாளை வெளியிடுகிறது. ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா ஆகியோர் இணைந்து இயக்கும் திரைப்படம் ‘பிரண்ட்ஷிப்’. இந்த படத்தின் மூலம் தமிழில் முதல்முறையாக பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடித்துள்ளார். ஹீரோயினாக இந்த படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற நடிகை லாஸ்லியா நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிகர் அர்ஜுன் நடித்துள்ளார். இவர்களுடன் காமெடி நடிகர் சதிஷ், ஜெ.எஸ்.கே.சதீஷ்குமார்,
 

ஹர்பஜன் சிங் – லாஸ்லியா இணைந்து நடிக்கும் ‘பிரண்ட்ஷிப்’ படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு நாளை வெளியிடுகிறது.

ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா ஆகியோர் இணைந்து இயக்கும் திரைப்படம் ‘பிரண்ட்ஷிப்’. இந்த படத்தின் மூலம் தமிழில் முதல்முறையாக பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்  ஹீரோவாக நடித்துள்ளார். ஹீரோயினாக இந்த படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற நடிகை லாஸ்லியா நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிகர் அர்ஜுன் நடித்துள்ளார்.

இவர்களுடன் காமெடி நடிகர் சதிஷ், ஜெ.எஸ்.கே.சதீஷ்குமார், வெங்கட் சுபா ஆகியோர் நடித்துள்ளனர். ஹர்பஜன் சிங் கல்லூரி மாணவராக நடித்துள்ள இப்படத்தை ஷேண்டோ ஸ்டுடியோ & சினிமாஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. உதயகுமார் என்பவர் இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். ‘பிரண்ட்ஷிப்’ படத்தின் டீசர் கடந்த மார்ச் 1ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதேபோன்று நடிகர் சிம்பு பாடிய பாடல் ஒன்றும் வெளியாகி பட்டையை கிளப்பியுள்ளது. தற்போது இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. வரும் சம்மரில் வெளியிட தயாராக இருந்த இப்படம் கொரானா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்று நாளை மாலை வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.