×

சொன்னது சொன்னபடி ‘கர்ணன்’ வெளியாகும்… படத்தயாரிப்பாளர் அதிரடி அறிவிப்பு…

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கர்ணன்’ திரைப்படம் திட்டமிட்டபடி நாளை வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் தனது ருத்ரதாண்டவத்தின் இரண்டாவது முகத்தை கொரானா காட்ட தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு வந்த கொரானா வைரஸ் படிபடியாகதான் அதிகரித்து வந்தது. ஆனால் தற்போது பரவி வரும் கொரானா ஒரே மாதத்தில் உச்சத்தை அடைந்துள்ளது. இதன் வீரியம் எப்படி இருக்கும் என்பதை விஞ்ஞானிகளால் கணிக்க இயலவில்லை. இதையடுத்து கொரானாவை கட்டுபடுத்த புதிய கட்டுபாடுகளை தமிழக அரசு
 

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கர்ணன்’ திரைப்படம் திட்டமிட்டபடி நாளை வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் தனது ருத்ரதாண்டவத்தின் இரண்டாவது முகத்தை கொரானா காட்ட தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு வந்த கொரானா வைரஸ் படிபடியாகதான் அதிகரித்து வந்தது. ஆனால் தற்போது பரவி வரும் கொரானா ஒரே மாதத்தில் உச்சத்தை அடைந்துள்ளது. இதன் வீரியம் எப்படி இருக்கும் என்பதை விஞ்ஞானிகளால் கணிக்க இயலவில்லை.

இதையடுத்து கொரானாவை கட்டுபடுத்த புதிய கட்டுபாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. வரும் ஏப்ரல் 10ம் தேதியிலிருந்து இந்த கட்டுபாடுகள் அமல்படுத்தப்பட உள்ளது. திரையரங்குகள் இனி 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் திரைப்படங்கள் திரையரங்களில் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதற்கிடையே தனுஷின் ‘கர்ணன்’ படம் நாளை மறுநாள் வெளியாக உள்ளது. மாஞ்சோலை பகுதியில் வசிக்கும் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் கடினமான வாழ்க்கையை மாரி செல்வராஜ் திரைப்படமாக உருவாகியுள்ளார். தனுஷுக்கு ஜோடியாக நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ள இப்படத்தின் டிக்கெட் புக்கிங்கும் ஹவுஸ்புல்லாகி விட்டது.

இந்நிலையில் இந்த படம் வெளியாகுமா என்ற நிலையில், படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தனது ட்விட்டரில் புதிய தகவலை வெளியிட்டுள்ளார். அதில் “சொன்னது சொன்னபடி ‘கர்ணன்’ திரைப்படம் நாளை திரைக்கு வரும், அரசின் அறிவிப்பின் படி, 50% இருக்கைகளோடு தக்க பாதுகாப்புடன் திரையிடப்படும் இத்திரைப்படத்திற்கு உங்கள் பேராதரவை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் ‘கர்ணன்’ திரைப்படம் வெளியாவது உறுதியாகியுள்ளது.