×

கண்டா வரச் சொல்லுங்க அடுத்து கலக்க வரும் ‘கர்ணன்’ படத்தின் இரண்டாம் பாடல்!

‘கர்ணன்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ‘கர்ணன்‘ படம் உருவாகி வருகிறது. மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சில தினங்களுக்கு முன்பு கர்ணன் படத்திலிருந்து ‘கண்டா வரச்சொல்லுங்க’ பாடல் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது. சமூக ஊடங்களில் தற்போது வரை பேசுபொருளாக இருந்து வருகிறது இந்தப் பாடல். தற்போது கர்ணன்
 

‘கர்ணன்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ‘கர்ணன்‘ படம் உருவாகி வருகிறது. மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

சில தினங்களுக்கு முன்பு கர்ணன் படத்திலிருந்து ‘கண்டா வரச்சொல்லுங்க’ பாடல் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது. சமூக ஊடங்களில் தற்போது வரை பேசுபொருளாக இருந்து வருகிறது இந்தப் பாடல்.

தற்போது கர்ணன் படத்தின் இரண்டாவது பாடல் மார்ச் 2-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளனர். கர்ணன் திரைப்படம் ஏப்ரல் மாதம் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

தனுஷ் தற்போது அவெஞ்சர்ஸ் இயக்குனர்கள் இயக்கத்தில் உருவாகி வரும் கிரே மேன் ஹாலிவுட் படத்திற்காக அமெரிக்காவில் உள்ளார். அங்கு தனுஷுக்கு நடிப்பு மற்றும் கதை குறித்த வகுப்புகள் வழங்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.