×

‘தளபதி 65’ படத்தில் இணைந்துள்ள பிரபல மலையாள நடிகை!

‘தளபதி 65’ படத்தில் மலையாள நடிகை அபர்ணா தாஸ் இணைந்துள்ளார். தளபதி 65 படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. அதையடுத்து இன்று முழுவதும் சோசியல் மீடியா முழுவதும் இந்தப் படம் பற்றிய பேச்சு தான். இந்த பூஜையில் பிக்பாஸ் கவின் கலந்துகொண்டார். அதையடுத்து கவின் இந்தப் படத்தில் நடிகர் இருப்பதாகக் கூறப்பட்டு வருகிறது. தற்போது மலையாள நடிகை அபர்ணா தாஸ், தளபதி 65 படத்தில் இணைந்துள்ளார். இதை அவரே உறுதி செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்
 

‘தளபதி 65’ படத்தில் மலையாள நடிகை அபர்ணா தாஸ் இணைந்துள்ளார்.

தளபதி 65 படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. அதையடுத்து இன்று முழுவதும் சோசியல் மீடியா முழுவதும் இந்தப் படம் பற்றிய பேச்சு தான். இந்த பூஜையில் பிக்பாஸ் கவின் கலந்துகொண்டார். அதையடுத்து கவின் இந்தப் படத்தில் நடிகர் இருப்பதாகக் கூறப்பட்டு வருகிறது.

தற்போது மலையாள நடிகை அபர்ணா தாஸ், தளபதி 65 படத்தில் இணைந்துள்ளார். இதை அவரே உறுதி செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “இந்த மிகப்பெரிய படத்தில் இணைந்ததை எனது பாக்கியமாகக் கருதுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தில் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க உள்ளார். அதையடுத்து நடிகை ரஷ்மிகா மந்தான்னா இந்தப் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் நடிகை அபர்ணா தாஸ் இந்தப் படத்தில் இணைந்திருப்பதால் ரஷ்மிகாவுக்கு பதில் அவர் இணைந்திருக்கிறா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தளபதி 65 படத்த்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.