×

விஷ்ணு விஷால் படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்…

விஷ்ணு விஷால் நடிக்கும் மோகன்தாஸ் படத்தில் பிக்பாஸ் பிரபலம் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘எஃப்.ஐ.ஆர்’ படத்தையடுத்து, அவர் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘மோகன்தாஸ்’. இந்த படத்தை முரளி கார்த்திக் இயக்கி வருகிறார். விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். விஷ்ணு விஷாலின் சொந்த நிறுவனமே இந்த படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தில் இந்திரஜித் சுமாரான் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். மேலும் பூர்ணிமா பாக்கியராஜ், கருணாகரன்,
 

விஷ்ணு விஷால் நடிக்கும் மோகன்தாஸ் படத்தில் பிக்பாஸ் பிரபலம் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘எஃப்.ஐ.ஆர்’ படத்தையடுத்து, அவர் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘மோகன்தாஸ்’. இந்த படத்தை முரளி கார்த்திக் இயக்கி வருகிறார். விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். விஷ்ணு விஷாலின் சொந்த நிறுவனமே இந்த படத்தை தயாரித்து வருகிறது.

இந்த படத்தில் இந்திரஜித் சுமாரான் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். மேலும் பூர்ணிமா பாக்கியராஜ், கருணாகரன், அக்ஷய் ராதாகிருஷ்ணன், லாலு, பிரகாஷ் ராகவன் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் அறிமுக டீசர் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதில் விஷ்ணு விஷாலின் நடிப்பு மிரட்டும் வகையில் இருந்தது.

இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிக்பாஸ் 2வது சீசனில் கலந்துகொண்ட ஷாரீக், இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். விரைவில் மோகன்தாஸ் ஷூட்டிங்கில் ஷாரிக் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.