×

வேகமெடுக்கும் கொரோனா… காலவரையின்றி நிறுத்தப்பட்ட ‘பொன்னியின் செல்வன்’!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கார்த்தி உறுதிப்படுத்தியுள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் அமரர் கல்கியின் வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் பிரம்மாண்ட பட்ஜெட்டில் திரைப்படமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், சரத்குமார் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்களான அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் இருவரும் இணைந்து
 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கார்த்தி உறுதிப்படுத்தியுள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் அமரர் கல்கியின் வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் பிரம்மாண்ட பட்ஜெட்டில் திரைப்படமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், சரத்குமார் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்களான அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.

தற்போது வரை இந்தப் படத்தில் 70% படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலை பரவி வருவதால் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு காலவரையின்றி நிறுத்தப்பட்டுள்ளதாகத் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை கார்த்தி உறுதிப்படுத்தியுள்ளார்.

சுல்தான் படத்தின் வெற்றியை அடுத்து கார்த்தி மற்றும் ரஷ்மிகா இருவரும் லைவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

அப்போது கார்த்தி தான் நடித்து வரும் பொன்னியின் செல்வன் படம் குறித்து பகிர்ந்து கொண்டார்.

“பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்கள் கொண்ட படம். 5 பாகங்கள் கொண்ட புத்தகத்தை இரண்டு பாகங்களாக சுருக்கி படமாக எடுக்கப்படுகிறது.

இது 1000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதை. வரலாற்றுச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட கற்பனைக் கதை. ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஜெயம் ரவி, ஜெயராம், சரத்குமார் என பல முக்கிய நடிகர்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.

தற்போது வரை 70 சதவீதப் படப்பிடிப்பை முடித்துவிட்டோம். கொரோனா பிரச்சினையால் படம் தாமதமாகிக் கொண்டிருக்கிறது. படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிடத் திட்டமிட்டு வருகிறோம். இது மிகப்பெரிய படம். இந்தக் கதையைப் படமாக்க கடந்த 60 ஆண்டுகளாக தமிழ் திரையுலகமே முயற்சி செய்து வருகிறது. அது தற்போது தான் சாத்தியமாகியுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

தற்போது கொரோனா மீண்டும் வேகமாக பரவி வருவதால் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு காலவரையின்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்பதையும் கார்த்தி உறுதிப்படுத்தியுள்ளார்.