×

தளபதி 65 படத்திற்காக நயன்தாராவுக்கு இணையாக சம்பளம் பெற்றுள்ள பூஜா ஹெக்டே!?

நடிகை பூஜா ஹெக்டே தளபதி 65 படத்தில் கதாநாயகியாக இணைந்துள்ளார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். டோலிவுட்டில் தற்போது கொடி கட்டி பறந்து வரும் பூஜா கோலிவுட் பக்கம் மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளார். மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்த பூஜா அதையடுத்து முன்னணி நடிகையாக வளர்த்துள்ளார். தற்போது தளபதி 65 படத்தில் நடிப்பதற்காக நயன்தாராவிற்கு இணையான சம்பளத்தை பூஜா பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. நயன்தாரா படங்களில் கதாநாயகியாக நடிப்பதற்கு 3
 

நடிகை பூஜா ஹெக்டே தளபதி 65 படத்தில் கதாநாயகியாக இணைந்துள்ளார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

டோலிவுட்டில் தற்போது கொடி கட்டி பறந்து வரும் பூஜா கோலிவுட் பக்கம் மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளார். மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்த பூஜா அதையடுத்து முன்னணி நடிகையாக வளர்த்துள்ளார். தற்போது தளபதி 65 படத்தில் நடிப்பதற்காக நயன்தாராவிற்கு இணையான சம்பளத்தை பூஜா பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

நயன்தாரா படங்களில் கதாநாயகியாக நடிப்பதற்கு 3 கோடி வரை சம்பளம் பெறுவார். தற்போது பூஜாவும் தளபதி 65 படத்திற்காக 3 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே தமிழில் முன்னணி நடிகையாகத் தான் என்ட்ரி கொடுத்துள்ளேன் என்பதை நிரூபித்துள்ளார் பூஜா.

தற்போது படக்குழு ஜார்ஜியாவில் இருக்கின்றனர். அங்கு 16 நாட்கள் வரை படப்பிடிப்பு நடக்கவுள்ளது. இந்தப் படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.