×

19 ஆண்டுகளுக்குப் பிறகு பிரசாந்த், சிம்ரன் இணையும் படம்… இன்று படப்பிடிப்பு துவக்கம்!

பிரசாந்த் நடிப்பில் உருவாகவிருக்கும் ‘அந்தகன்’ படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. 2018-ல் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மன் குரானா, ராதிகா ஆப்தே, தபு உள்ளிட்டோர் நடிப்பில் இந்தியில் வெளியான ‘அந்தாதுன்’ திரைப்படம் படம் ப்ளாக்பாஸ்டர் வெற்றி பெற்றது. அதையடுத்து, அந்தப் படம் இந்தியாவின் பல மொழிகளில் ரீமேக் ஆகிவருகிறது. நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியிருந்தார். மற்ற மொழிகளில் ஏற்கனவே படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தமிழில் மட்டும்
 

பிரசாந்த் நடிப்பில் உருவாகவிருக்கும் ‘அந்தகன்’ படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது.

2018-ல் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மன் குரானா, ராதிகா ஆப்தே, தபு உள்ளிட்டோர் நடிப்பில் இந்தியில் வெளியான ‘அந்தாதுன்’ திரைப்படம் படம் ப்ளாக்பாஸ்டர் வெற்றி பெற்றது.

அதையடுத்து, அந்தப் படம் இந்தியாவின் பல மொழிகளில் ரீமேக் ஆகிவருகிறது. நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியிருந்தார். மற்ற மொழிகளில் ஏற்கனவே படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

தமிழில் மட்டும் பல்வேறு பிரச்சனைகள் காரணமாக படப்பிடிப்பு துவங்காமல் இருந்து வந்தது. இந்நிலையில், இந்தப் படத்தின் இன்று துவங்கியுள்ளது.

இந்தப் படத்தை ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தில் இயக்குனர் ஜேஜே பிரெட்ரிக் இயக்கவுள்ளார். தமிழ் ரீமேக்கில் தபு கதாபாத்திரத்தில் சிம்ரன் நடிக்கிறார். 19 ஆண்டுகளுக்குப் பிறகு சிம்ரனும் பிரசாந்தும் இணைந்து இந்தப் படத்தில் நடிக்கவுள்ளனர். இவர்கள் 2002-ம் ஆண்டு வெளியான தமிழ் படத்தில் கடைசியாக இணைந்து நடித்திருந்தனர்.

நடிகர் கார்த்திக்கும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.