பிரசாந்த் படத்தில் இயக்குனர் மாறியது எப்படி? மோகன்ராஜா விலகியது ஏன்!?

பிரசாந்த் படத்தில் இயக்குனர் மாறியது எப்படி? மோகன்ராஜா விலகியது ஏன்!?

கடந்த 2018-ம் ஆண்டு ஹிந்தியில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மன் குரானா, ராதிகா ஆப்தே, தபு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ‘அந்தாதுன்’ திரைப்படம் படம் ப்ளாக்பாஸ்டர் வெற்றி பெற்றது.

பிரசாந்த் படத்தில் இயக்குனர் மாறியது எப்படி? மோகன்ராஜா விலகியது ஏன்!?

அதையடுத்து, நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியிருந்தார். அதையடுத்து அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக்கில் பிரசாந்த் நடிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

முதலில் இந்தத் தமிழ் ரீமேக்கை இயக்குனர் மோகன்ராஜா இயக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து சமீபத்தில் மோகன்ராஜா இந்தப் படத்தில் இருந்து விலகியதாகக் கூறப்பட்டது. இந்தப் படத்திற்காக பெரிய தொகையை மோகன்ராஜா சம்பளமாக கேட்டுள்ளார். பின்னர் பல்வேறு கட்ட பேச்சவார்த்தைக்குப் பிறகு நான்கு கோடி சம்பளம் முடிவானதாம்.

Mohan Raja

பின்னர் மோகன்ராஜா படப்பிடிப்பில் ஏற்படுத்திய மாற்றங்களால் இன்னும் அதிக செலவு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக தியாகராஜனுக்கும் மோகன்ராஜாவுக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது. மேலும் தனி ஒருவன் 2 படத்திற்கு முன்னர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகும் ‘ஆர்ஆர்ஆர்’ படத்திலும் மோகன்ராஜா நடிக்க உள்ளார். இந்த காரணங்களால் மோகன் ராஜா இப்படத்தில் இருந்து விலக முடிவெடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. வாங்கிய அட்வான்ஸ் தொகையைத் திருப்பிக் கொடுத்துவிடுவதாகவும் கூறியிருக்கிறார்.

director JJ Fredrick

ஜோதிகா நடிப்பில் வெளியான ‘பொன்மகள் வந்தாள்’ படத்தில் தியாகராஜனும் நடித்திருந்தார். அப்போது படத்தின் இயக்குனர் ஜேஜே பிரெட்ரிக் உடன் அவருக்கு நல்ல பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதனால் தற்போது ‘அந்தாதுன்’ படத்தின் ரிமேக்கை பிரெடிரிக் இயக்குமாறு தியாகராஜன் கேட்டுகொண்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் நடிகை ஐஸ்வர்யா ராய் தமிழ் ரீமேக்கில் தபு கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Share this story