×

ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஜோடியாகும் பிரபல பாடகியின் கணவர்!

நடிகை ராகுல் ரவீந்திரன், ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஜோடியாக தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ளார். மலையாளத்தில் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் நிமிஷா சஜயன் ஆகியோர் நடிப்பில் வெளியான ‘தி கிரேக் இந்தியன் கிச்சன்’ திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதையடுத்து தற்போது இந்தப் படம் தமிழில் ரீமேக் ஆகி வருகிறது. இயக்குனர் ஆர் கண்ணன் இந்தப் படத்தை இயக்குகிறார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக யார் நடிக்கப்
 

நடிகை ராகுல் ரவீந்திரன், ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஜோடியாக தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ளார்.

மலையாளத்தில் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் நிமிஷா சஜயன் ஆகியோர் நடிப்பில் வெளியான ‘தி கிரேக் இந்தியன் கிச்சன்’ திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதையடுத்து தற்போது இந்தப் படம் தமிழில் ரீமேக் ஆகி வருகிறது.

இயக்குனர் ஆர் கண்ணன் இந்தப் படத்தை இயக்குகிறார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், நடிகர் ராகுல் ரவீந்திரன் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராகுல் ரவீந்திரன் தமிழில் மாஸ்க்கோவின் காவேரி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தெலுங்கில் இரண்டு படங்களையும் இயக்கியுள்ளார். தனது முதல் படத்திலே சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதும் வென்றுள்ளார். இவர் பிரபல பாடகி சின்மயியின் கணவர் ஆவார்.

“இது ஒரு அருமையான கதாபாத்திரம் மற்றும் அழகான ஸ்கிரிப்ட். நான் மலையாளத்தில் இந்தப் படத்தைப் பார்த்தேன், இது முற்றிலும் தனித்துவமான படம். இது அனைத்து இந்திய மொழிகளிலும் சொல்லப்பட வேண்டிய கதை. நம் துணைக் கண்டத்தைப் பொருத்தவரை இந்தப் படத்தின் கருப்பொருள் உலகளாவியது. இயக்குனர் கண்ணனுக்கு என் மனைவியை 20 ஆண்டுகளாகத் தெரியும். எனது விண்மீன்கள் திரைப்படத்தின் திரையிடலிலும் அவர் கலந்து கொண்டார். ​​அவர் இந்தப் படம் பற்றி என்னிடம் கூறிய போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் அவருடன் வேலை செய்ய ஆர்வமாக உள்ளேன் என்று சொன்னேன். இது ஒரு சிறந்த குழு. ஐஸ்வர்யாவைப் போன்ற திறமையான ஒருவருடன் நான் பணியாற்றுவதே மிகப்பெரிய சலுகைகளில் ஒன்றாகும்.” என்று ராகுல் தெரிவித்துள்ளார்.

நேற்று இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.