×

ஷங்கர் படத்தில் கதாநாயகியான கீதா கோவிந்தம் நடிகை!

டோலிவுட் நடிகர் ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கவிருக்கும் படத்தில் நடிகை ரஷ்மிகா மந்தான்னா கதாநாயகியாக நடிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இயக்குனர் ஷங்கர் தனது அடுத்த படத்தில் நடிகர் ராம் சரண் நடிப்பில் இயக்குகிறார். இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா நிறுவனம் தயாரிக்கின்றனர். தற்போது இந்தப் படத்தில் நடிகை ரஷ்மிகா மந்தான்னா கதாநாயகியாக நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. ரஷ்மிகா தெலுங்கில் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட், பீஷ்மா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
 

டோலிவுட் நடிகர் ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கவிருக்கும் படத்தில் நடிகை ரஷ்மிகா மந்தான்னா கதாநாயகியாக நடிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இயக்குனர் ஷங்கர் தனது அடுத்த படத்தில் நடிகர் ராம் சரண் நடிப்பில் இயக்குகிறார். இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா நிறுவனம் தயாரிக்கின்றனர்.

தற்போது இந்தப் படத்தில் நடிகை ரஷ்மிகா மந்தான்னா கதாநாயகியாக நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. ரஷ்மிகா தெலுங்கில் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட், பீஷ்மா ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழில் கார்த்தி உடன் ‘சுல்தான்’ படத்தில் நடித்துள்ளார். ஹிந்தி மற்றும் தெலுங்கில் பல படங்களில் பிசியாக அடித்து வருகிறார்.

ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம் வரலாற்றுக் கதை கொண்ட படமாக இருக்கும் எனவும், 2022 ஆம் ஆண்டின் முதற் பகுதியில் இப்படம் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் படமாக்கப்பட உள்ளது.