×

பாரிஸ் ஜெயராஜ் படத்தின் மதிப்பு இத்தனை கோடியா!?

சந்தானம் நடித்துள்ள ‘பாரிஸ் ஜெயராஜ்’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமை நல்ல தொகைக்கு விற்பனையாகியுள்ளதாக கோலிவுட் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இயக்குனர் கே ஜான்சன் மற்றும் சந்தானம் கூட்டணி இரண்டாவது முறையாக பாரிஸ் ஜெயராஜ் படத்தில் இணைந்துள்ளனர். இந்தக் கூட்டணியில் முதலாவதாக உருவான ‘A1’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. சந்தானம் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடித்த படங்களில் அதிக வசூலைப் பெற்ற படமும் கூட. இதனால் சந்தானம், கே ஜான்சனுடன் மீண்டும் ஒரு படத்தில் கூட்டணி அமைக்க
 

சந்தானம் நடித்துள்ள ‘பாரிஸ் ஜெயராஜ்’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமை நல்ல தொகைக்கு விற்பனையாகியுள்ளதாக கோலிவுட் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இயக்குனர் கே ஜான்சன் மற்றும் சந்தானம் கூட்டணி இரண்டாவது முறையாக பாரிஸ் ஜெயராஜ் படத்தில் இணைந்துள்ளனர். இந்தக் கூட்டணியில் முதலாவதாக உருவான ‘A1’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. சந்தானம் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடித்த படங்களில் அதிக வசூலைப் பெற்ற படமும் கூட. இதனால் சந்தானம், கே ஜான்சனுடன் மீண்டும் ஒரு படத்தில் கூட்டணி அமைக்க முடிவெடுத்து பாரிஸ் ஜெயராஜ் படத்தில் நடித்தார்.

இந்தப் படத்தில் சந்தானம் வடசென்னையைச் சேர்ந்த கானா பாடகராக நடித்துள்ளார். இப்படத்திலிருந்து வெளியான அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. சந்தோஷ் நாராயணன் தனது சிறப்பான இசையைக் கொடுத்து கானா பாடகருக்கு ஏற்ற படமாக மெருகூட்டியுள்ளார்.

இந்நிலையில் பாரிஸ் ஜெயராஜ் படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமையை தயாரிப்பாளர் பிரபுதிலக் வாங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. படத்தின் உரிமை ஐந்து கோடி விற்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பாரிஸ் ஜெயராஜ் திரைப்படம் வரும் பிப்ரவரி 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.