×

பூஜையுடன் தொடங்கிய ‘மாநாடு’ டப்பிங் பணிகள்… வெளியான புகைப்படங்கள்…

‘மாநாடு’ படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்ததை அடுத்து டப்பிங் பணிகள் இன்று தொடங்கியுள்ளது. சிம்புவின் ‘மாநாடு’ படம் வேகமாக உருவாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். சிம்புக்கு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடித்து வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகும் இப்படம் அரசியல் த்ரில்லரில் தயாராகி வருகிறது. இந்த படத்தின் இறுதிக்கட்ட க்ளைமாக்ஸ் காட்சிகளுக்காக அரசியல் மாநாடு போன்று செட் அமைத்து படமாக்கப்பட்டுவிட்டது. இதையடுத்து கொரானா நேரத்திலும் படப்பிடிப்பிற்காக சமீபத்தில்
 

‘மாநாடு’ படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்ததை அடுத்து டப்பிங் பணிகள் இன்று தொடங்கியுள்ளது.

சிம்புவின் ‘மாநாடு’ படம் வேகமாக உருவாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். சிம்புக்கு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடித்து வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகும் இப்படம் அரசியல் த்ரில்லரில் தயாராகி வருகிறது. இந்த படத்தின் இறுதிக்கட்ட க்ளைமாக்ஸ் காட்சிகளுக்காக அரசியல் மாநாடு போன்று செட் அமைத்து படமாக்கப்பட்டுவிட்டது.

இதையடுத்து கொரானா நேரத்திலும் படப்பிடிப்பிற்காக சமீபத்தில் படக்குழுவினர் மாலத்தீவுக்கு சென்றிருந்தனர். அங்கு சிம்பு மற்றும் கல்யாணி ப்ரியதர்ஷன் இணைந்து நடிக்கும் பாடல் காட்சி ஒன்று அழகாக படமானது. அந்த பாடலில் நடித்த சிம்புவின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

இந்த படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங்கை கிட்டத்தட்ட முடித்துள்ளனர் படக்குழுவினர். இதையடுத்து படத்திற்கான டப்பிங்கை தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் ‘மாநாடு’ படத்தின் டப்பிங் பணிகள் பூஜையோடு இன்று தொடங்கியது. இந்த நிகழ்வின் புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.