×

மாறுபட்ட படமாக உருவாகும் ‘தளபதி 65’… படத்தின் புதிய தகவல் கசிந்தது…

மற்ற விஜய் படங்களை விட மாறுப்பட்டதாக இந்த படம் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. தளபதி 65-வது படத்தின் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் எப்படி உருவாக போகிறது என்பது குறித்து அப்டேட்டுகள் ஒன்றன்பின் ஒன்றாக வர தொடங்கியுள்ளது. நெல்சன் இயக்கும் இப்படத்திற்கு பெரிய ஆதரவு விஜய் ரசிகர்களிடையே உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். இதோடு இன்னொரு நடிகையாக அபர்ணா தாஸ் நடிக்கவிருக்கிறார். மேலும் கவின், யோகிபாபு உள்ளிட்டோர்
 

மற்ற விஜய் படங்களை விட மாறுப்பட்டதாக இந்த படம் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி 65-வது படத்தின் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் எப்படி உருவாக போகிறது என்பது குறித்து அப்டேட்டுகள் ஒன்றன்பின் ஒன்றாக வர தொடங்கியுள்ளது. நெல்சன் இயக்கும் இப்படத்திற்கு பெரிய ஆதரவு விஜய் ரசிகர்களிடையே உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். இதோடு இன்னொரு நடிகையாக அபர்ணா தாஸ் நடிக்கவிருக்கிறார். மேலும் கவின், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். அனிரூத் இந்த படத்திற்கு தரமான பாடல்களை உருவாக்கி வருகிறார். இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணியாற்ற உள்ளார்.

ஸ்டெண்ட் பணிகளை அன்பறிவ் சகோதரர்கள் கவனிக்க இருக்கின்றனர். முதற்கட்டமாக ரஷ்யாவில் ஷூட்டிங் நடத்த முடிவு செய்திருந்த நிலையில், அந்நாட்டு அனுமதி இன்னும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் பிளானை மாற்றிய நெல்சன், சென்னையில் பாடல் காட்சிகளை படப்பதிவு செய்ய முடிவு செய்துள்ளார். அதற்காக பூந்தமல்லியில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் விரைவில் முடிந்தவுடன் ஷூட்டிங் தொடங்க உள்ளது.

இந்நிலையில் இந்த படம் குறித்து புதிய தகவல் கசிந்துள்ளது. தளபதி 65வது படம் உலக தரத்திலான படமாக உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங்கை மொத்தமாக வெளிநாடுகளிலே முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே விஜய்யின் இந்த படம் மற்ற படங்களை விட மாறுப்பட்ட படமாக இருக்கக்கூடும் என கூறப்படுகிறது.