×

குடும்பப் பெண்ணாக மாறிய ஐஸ்வர்யா ராஜேஷ்!

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகும் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது. மலையாளத்தில் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் நிமிஷா சஜயன் ஆகியோர் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான ‘தி கிரேக் இந்தியன் கிச்சன்’ திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை ஜோ பேபி இயக்கியிருந்தார். மலையாளத்தில் வெளியாகியிருந்தாலும் இப்படம் நாட்டின் பல மாநிலங்களில் பேசு பொருளாக மாறியது. குறிப்பாக தமிழகத்தில். இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை இயக்குனர்
 

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகும் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது.

மலையாளத்தில் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் நிமிஷா சஜயன் ஆகியோர் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான ‘தி கிரேக் இந்தியன் கிச்சன்’ திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை ஜோ பேபி இயக்கியிருந்தார்.

மலையாளத்தில் வெளியாகியிருந்தாலும் இப்படம் நாட்டின் பல மாநிலங்களில் பேசு பொருளாக மாறியது. குறிப்பாக தமிழகத்தில்.

இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை இயக்குனர் கண்ணன் வாங்கியுள்ளார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இந்தப் படத்தில் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். சில தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் பூஜை நடைபெற்றது.

இன்று இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. ஐஸ்வர்யா குடும்பப் பெண்ணாக மிளிரும் புகைப்படமும் வெளியாகியுள்ளது. தமிழில் கதாநாயகனாக நடிப்பது யார் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. விரைவில் படம் குறித்த கூடுதல் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.