×

கமல்ஹாசன் நடிக்கும் ‘விக்ரம்’ படத்திலிருந்து ராகவா லாரன்ஸ் விலகக் காரணம் இது தான்!

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்திலிருந்து ராகவா லாரன்ஸ் விலகியதற்கான காரணம் தெரிய வந்துள்ளது. கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜா இயக்கத்தில் விக்ரம் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை கமலின் சொந்தத் தயாரிப்பு நிறுவனம் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். முதலில் இந்தப் படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் தான் வில்லனாக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. அதையடுத்து அவர் விக்ரம் படத்திலிருந்து விலகினார் என்றும் தெரிவிக்கப்பட்டது. தற்போது
 

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்திலிருந்து ராகவா லாரன்ஸ் விலகியதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜா இயக்கத்தில் விக்ரம் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை கமலின் சொந்தத் தயாரிப்பு நிறுவனம் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

முதலில் இந்தப் படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் தான் வில்லனாக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. அதையடுத்து அவர் விக்ரம் படத்திலிருந்து விலகினார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தற்போது ராகவா லாரன்ஸ் விக்ரம் படத்திலிருந்து விலக்கியதற்கான காரணம் தெரியவந்துள்ளது.

ராகவா லாரன்ஸ் தற்போது கதிரேசன் இயக்கத்தில் ருத்ரன் படத்தில் நடித்து வருகிறார். அதையடுத்து, பி வாசு சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார். இந்தப் படம் மே மாதம் முதல் துவங்க இருக்கிறது. எனவே தொடர்ந்து படப்பிடிப்பு இருப்பதால் விக்ரம் படத்திற்கு தேதிகள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்படுவது போல் இருந்துள்ளது. எனவே அவர் இந்தப் விக்ரம் படத்திலிருந்து விலகியதாகக் கூறப்படுகிறது.

அதையடுத்து, ராகவா லாரன்சுக்குப் பதிலாக மலையாள நடிகர் ஃபஹத் பாசில் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். அதை ஃபஹத் பாசிலே ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். தற்போது விக்ரம் படத்தின் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது.