×

வேண்டுகோள் விடுத்த விக்ரம், கண்டுகொள்ளாத கவுதம் மேனன்… துருவ நட்சத்திரம் தாமதம் ஆகக் காரணம் இதுதானாம்!

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ படம் வெளியாவது ஏன் இவ்வளவு தாமதம் ஆகி வருகிறது என்பது குறித்த காரணம் வெளியாகியுள்ளது. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் துருவ நட்சத்திரம். இந்தப் படம் ஆரம்பிக்கப்பட்டு பல வருடங்கள் ஆகியும் தற்போது வரை ரிலீஸ் ஆவதில் சிக்கல் நிலவி வருகிறது . இந்தப் படத்திற்கு கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்தப் படம் வெளியாகாமல் இருந்து வருவது விக்ரம்
 

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ படம் வெளியாவது ஏன் இவ்வளவு தாமதம் ஆகி வருகிறது என்பது குறித்த காரணம் வெளியாகியுள்ளது.

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் துருவ நட்சத்திரம். இந்தப் படம் ஆரம்பிக்கப்பட்டு பல வருடங்கள் ஆகியும் தற்போது வரை ரிலீஸ் ஆவதில் சிக்கல் நிலவி வருகிறது .

இந்தப் படத்திற்கு கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்தப் படம் வெளியாகாமல் இருந்து வருவது விக்ரம் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்து வருகிறது.

துருவ நட்சத்திரம் படம் பல காரணங்களால் வெளியாவதில் தாமதம் ஆவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் படத்தில் இன்னும் சில காட்சிகள் படமாக்கப்பட வேண்டியுள்ளதாம். பல படங்களில் நடித்து வரும் விக்ரம் கவுதம் மேனனிடம் இந்தப் படத்தை முடிப்பதற்கான வேலைகளைக் கவனிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் கவுதம் மேனன் விக்ரம் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் மற்ற வேலைகளில் கவனம் செலுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

விக்ரம் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘சீயான் 60’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் துருவ் விக்ரமும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பிலும் கலந்துகொள்ள உள்ளார் விக்ரம்.