அதிரடி ஆக்ஷன் மற்றும் ரொமான்ஸில் கலக்கும் விக்ரம்… ‘துருவநட்சத்திரம்’ படத்தின் ‘ஒரு மனம்’ பாடல் வெளியானது!

அதிரடி ஆக்ஷன் மற்றும் ரொமான்ஸில் கலக்கும் விக்ரம்… ‘துருவநட்சத்திரம்’ படத்தின் ‘ஒரு மனம்’ பாடல் வெளியானது!

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் ‘ஒரு மனம்’ பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.

நடிகர் விக்ரம் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடித்த துருவ நட்சத்திரம் படத்தற்கு கோலிவுட்டில் இன்றளவும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த படத்தில் விக்ரம், ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், விநாயகன், திவ்யதர்ஷினி, முன்னா சைமன், சதீஷ் கிருஷ்ணன், வம்சி கிருஷ்ணா என பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஹாலிவுட் தரத்திலான ஆக்சன் காட்சிகள் படத்தின் எதிர்பார்ப்பை எகிறச் செய்தது.

Image

தற்போது இந்தப் படத்தின் ஒரு மனம் என்ற பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

பாடல் காட்சிகள் முழுதும், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ரித்து வர்மாவுடன் விக்ரம் ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும் பல ஆக்சன் காட்சிகளும் மிரட்டுகின்றன. ஒவ்வொரு பிரேமிலும் காட்சியின் தரம் ஹாலிவுட்டிற்கு இணையாக உள்ளது. இப்பாடல் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

Share this story