ஆர்யா, விஷால் எதிரிகளாக நடிக்கும் படப்பிடிப்பில் இணைந்த பிரகாஷ் ராஜ்!
விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கும் எனிமி படத்தின் படப்பிடிப்பில் பிரகாஷ் ராஜ் இணைந்துள்ளார்.
இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து ‘எனிமி’ என்ற படத்தில் நடிக்கின்றனர். விஷால் ஆர்யா நிஜ வாழ்க்கையில் நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர். ஆனால் இந்தப் படத்தில் இருவரும் ஒருவருக்கொருவர் மிரட்டல் எதிரிகளாக நடிக்கின்றனர். நடிகை மிருணாளினி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப்படத்தை வினோத் என்பவர் தயாரிக்கிறார்.

இந்தப் படத்திற்கு கோலிவுட்டில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்தப் படத்தின் பிரகாஷ் ராஜ் நடிக்க இருப்பதாக படக்குழுவினர் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.
இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இரண்டாவது கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. இதையடுத்து ஊட்டியில் நடக்க இருக்கிறது.

சமீபத்தில் பிரம்மாண்ட செட்கள் அமைக்கப்பட்டு சில ஸ்டண்ட் காட்சிகள் எடுக்கப்பட்டது.
தற்போது இயக்குனர் ஆனந்த் சங்கர் வெளியிட்டுள்ள பதிவில் “கடைசியாக அற்புத நடிகர் பிரகாஷ்ராஜ் சார் எங்கள் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். எதிரிகளின் எஜமானர்.” என்று தெரிவித்துள்ளார்.