‘பிசாசு 2’ படப்பிடிப்பில் மீண்டும் இணையத் தயாரான ஆன்ட்ரியா!

‘பிசாசு 2’ படப்பிடிப்பில் மீண்டும் இணையத் தயாரான ஆன்ட்ரியா!

நடிகை ஆன்ட்ரியா கடைசியாக விஜய் உடன் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். தற்போது மிஷ்கின் இயக்கத்தில் ‘பிசாசு 2’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் டிசம்பர் மாதம் துவங்கியது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதியும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

கார்த்திக் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதன் தொடர்ச்சியை ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மென்ட்டின் டி முருகானந்தம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

‘பிசாசு 2’ படப்பிடிப்பில் மீண்டும் இணையத் தயாரான ஆன்ட்ரியா!

ஆன்ட்ரியா ஜனவரி மாதம் பிசாசு 2 படப்பிடிப்பில் இணைந்தார். தற்போது லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது படப்பிடிப்பு முழுவதும் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும் படப்பிடிப்பைத் துவங்க தயாராக உள்ளனர். இன்னும் ஒரு வாரத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் ஒரு காட்சியில் ஆன்ட்ரியா நிர்வாணமாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்திற்காக அவருக்கு ஒரு கோடி வரை சம்பளம் கொடுக்கப்படுகிறதாம். மேலும் விஜய் சேதுபதி பேய் ஓட்டும் சாமியாராக நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

Share this story